டிரெண்டை உடைத்த தலைமை நீதிபதி பாப்டே – ஹார்லி டேவிட்சன் பைக்கில் ஸ்டைலிஷ் போஸ்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. 64 வயதான தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சூப்பர் பைக்குகளின் காதலர் என்று கூறப்படுகிறது. நாக்பூரில் அவர் வழக்கறிஞராக பணிபுரிந்த போது, பைக்குகள் மீது அதிக கிரேஸ் இருந்ததாக…
chief justice of india sharad arvind bobde harley davidson superbike viral picure, twitter reactions, trending, எஸ்.ஏ.பாப்டே, ஹார்லி டேவிட்சன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
64 வயதான தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சூப்பர் பைக்குகளின் காதலர் என்று கூறப்படுகிறது. நாக்பூரில் அவர் வழக்கறிஞராக பணிபுரிந்த போது, பைக்குகள் மீது அதிக கிரேஸ் இருந்ததாக முன்பே பேசியுள்ளார். இந்நிலையில், தற்போது அவர் ஸ்டைலிஷான போஸில், ஹார்லி டேவிட்சன் CVO 2020 மாடல் பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படம் தலைமை நீதிபதியின் சொந்த ஊரான நாக்பூரில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் தற்போது அங்கு தான் இருந்து வருகிறார். எனினும், சிலர் இதனை விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர். சிலர், தலைமை நீதிபதி முகக்கவசம் அல்லது ஹெல்மெட் அணியவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
I like ppl who love life. No false pretensions. No false sense of protocol. Lutyens delhi full of such ppl. Just saw this pic on social media of our current CJI Sharad Bobde. A different person. Positions come & go. But you hv 1 life. pic.twitter.com/EFEr23KdP0
கடந்த நவம்பர் 2019ல் தலைமை நீதிபதியாக பாப்டே பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, வந்த பல பேட்டிகளில் அவர் தனக்கு பைக் மீது உண்டான காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
அயோத்தி கோவில் வழக்கு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கிய தலைமை நீதிபதி, தற்போது கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”