சிஎஸ்கே வெற்றிக்காக பிரார்த்தனை செய்த தோனி மகள்; வைரல் புகைப்படம்

‘Praying for papa’s team’: Picture of MS Dhoni’s daughter Ziva goes viral, netizens call it the ‘cutest IPL moment’: தந்தை அணிக்காக பிரார்த்தனை செய்த மகள்; வைரலாகும் தோனியின் மகள் புகைப்படம்; ஐபிஎல்லில் அழகான தருணம் என நெட்டிசன்கள் பதிவு

சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) ஆதரிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் திங்களன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் கவலையில் இருந்துவந்த நிலையில், சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியின் மகள் போட்டியின் நடுவே சிஎஸ்கே வெற்றிக்காக பிரார்த்தனை செய்தவதாக வெளியாகியுள்ள புகைப்படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு, இணையத்திலும் வைரலாகி வருகிறது.

இப்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வரும் இந்தப் புகைப்படத்தில், துபாய் மைதானத்தில் தனது தாய் சாக்ஷி தோனியுடன் அமர்ந்து ஜிவா தோனி கை கூப்பி, கண்களை மூடிக்கொண்டு தலை குனிந்து அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான இறுக்கமான போட்டியின் மத்தியில் ஜிவா தனது தந்தையின் அணிக்காக பிரார்த்தனை செய்வதாக பல ஊகங்களை இந்த படம் கிளப்பியுள்ளது.

சிறுமியின் சிந்தனை சைகையைப் பாராட்டி சிலர் வைரல் படத்தை மறுபகிர்வு செய்ய ட்விட்டரில் எடுத்துக்கொண்டனர். “ஜிவா பிரார்த்தனை மிகவும் அழகான விஷயம்” என்று ஒரு பயனர் எழுதினார், மற்றொருவர் அதை “இந்த நாளின் சிறந்த தருணம்” என்று அழைத்தார்.

துபாய் சர்வதேச மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Picture of ms dhoni daughter ziva dhoni praying goes viral

Next Story
செல்லப்பிராணியா இன்னும் நாய், பூனையெல்லாம வளத்துட்டு இருக்கீங்க? என்னங்க நீங்க!viral video, trending viral video, snake viral video, python viral videos
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com