New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/04/FPwd7NHaAAAK81Y.jpg)
இது நிச்சயமாக பழைய படமாக இருக்க வேண்டும். ஏன் என்றால் ஒருவருமே முகக்கவசம் அணியவில்லை என்று ஒருவர் கூற, மற்றொருவர் நீங்கள் என்ன கைலாஷாவிலா இருக்கின்றீர்கள்? முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்து வெகுநாட்கள் ஆகிவிட்டது என்று பதில் கூறியுள்ளார்.
ரயில்கள் ஏழைகளின் விமானமாக, சொகுசு வாகனமாக பல ஆண்டுகள் இருந்து வருவதை மறுப்பதற்கு ஒன்றும் இல்லை. மிகவும் விருப்பமான தொலைதூர பயணங்களுக்கு நம்முடைய முதல் தேர்வாக இருப்பது இந்த ரயில்கள் மட்டுமே. நம்முடைய செல்லப் பிராணிகளை அடிக்கடி அதில் அழைத்துப் போனால் என்ன என்ற எண்ணம் நமக்கு தோன்றும். ஆனால் பிறகு அக்கம் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் திட்டு வாங்க வேண்டும். டி.டி.ஆர். வந்தால் இறக்கிவிடப்படும் சூழல் ஏற்படும் என்று இவை அனைத்தையும் கருத்திக் கொண்டு மௌனமாக இருந்து விடுவோம். ஆனால் இங்கே கிழக்கு ரயில்வேயில் ஒரு ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
புறநகர் ரயில் ஒன்றில் குதிரை ஒன்று நின்றிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அது குறித்து விசாரணை நடத்த கிழக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது என்று பூஜா மேத்தா என்ற பத்திரிக்கையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீல்தாஹ், டையமண்ட் ஹார்பர் டவுன் ரயிலில் இந்த நிகழ்வு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த புகைப்படத்தின் கீழே கமெண் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இது நிச்சயமாக பழைய படமாக இருக்க வேண்டும். ஏன் என்றால் ஒருவருமே முகக்கவசம் அணியவில்லை என்று ஒருவர் கூற, மற்றொருவர் நீங்கள் என்ன கைலாஷாவிலா இருக்கின்றீர்கள்? முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்து வெகுநாட்கள் ஆகிவிட்டது என்று பதில் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.