உத்தரபிரதேச மாநிலம், ஜான்சியில் ஒரு வீட்டில் வளர்க்கப்படும் பிட் புல் வகை நாய் ஒன்று, தோட்டத்தில் பாய்ந்து வந்த ராஜநாகப் பாம்பிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியதற்காக சமூக வலைதள பயனர்களால் ஹீரோவாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்த வைரல் வீடியோவில் பதிவாகியுள்ள இந்த சம்பவம் ஜான்சியின் சிவ கணேஷ் காலனியில் நடந்துள்ளது.
எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், பிட் புல் வகை நாய் ஆக்ரோஷமாக ராஜநாகப் பாம்புடன் சண்டையிடுவதைக் காணலாம். பிட் புல் நாய் ராஜநாகப் பாம்பைக் கடித்து சிறிது நேரம் தனது வாயிலேயே வைத்திருந்தது. பின்னர், அது இறந்த பிறகுதான் அதை விட்டது.
பிட் புல் நாய் - ராஜநாகப் பாம்பு சண்டை வைரல் வீடியோவை இங்கே பாருங்கள்:
இந்த பிட் புல் வகை நாய் ஜென்னி, பஞ்சாப் சிங்கைச் சேர்ந்தது. இந்த நாய் இதுவரை எட்டு முதல் 10 பாம்புகளைக் கொன்றுள்ளது என்று என்.டி.டி.வி தெரிவித்துள்ளது. சிங் வீட்டில் இல்லாத போது, அவரது மகனும் மற்ற குழந்தைகளும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது சமீபத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. “வீட்டுப் பணியாளரின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு கருப்பு பாம்பு வந்தது. குழந்தைகள் அலற, பாம்பு தப்பி ஓடியது. அப்போதுதான் எங்கள் பிட் புல் அதைக் கவனித்து, அதன் கயிற்றில் இருந்து விடுபட்டு, நாகப்பாம்பை தாக்கி கொன்றது” என்று சிங் கூறியதாக என்.டி.டிவி தெரிவித்துள்ளது.
இதேபோன்ற சம்பவம் 2019-ல் நடந்தது, ஒரு நாய் தனது உரிமையாளரை நாகப்பாம்பிடம் இருந்து காப்பாற்றிய பிறகு இறந்தது. தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாயின் உரிமையாளர் தனது விவசாய வயல்களுக்கு காலை நடைபயிற்சி சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. தகவல்களின்படி, நாய் ஒரு நாகப்பாம்பு அவர்களை நோக்கி ஊர்ந்து செல்வதைக் கண்டு அதனுடன் சண்டையிடத் தொடங்கியது. அந்த நாய் பாம்பின் தலையைக் கடித்து பின்னர் இறந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“