பிரபலமான தி லயன் கிங் என்ற கார்ட்டூன் படத்தை பார்த்து 4 மாத நாய்க் குட்டி அழும் வீடியோ நெட்டிசன்கள் பலரை உருக வைத்திருக்கிறது.
1994ம் ஆண்டு டிஸ்நி நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி உலகம் புழுவதும் புகழ்பெற்ற படம் ‘தி லயன் கிங்’. இந்த படத்தைப் பார்த்த பெரும்பாலானோருக்கு சிம்பாவின் தந்தை முஃபாசா மரணமடையும் காட்சி கண்ணீரை வர வைக்கும்.
தி லயன் கிங் படத்தை பார்த்து அழுத நாய்க் குட்டி
அந்த படத்தை வெளிநாட்டில் ஒருவர்தனது 4 மாத பிட்புல் நாய்க் குட்டியுடன் இணைந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த படத்தில் வரும் சிங்கக் குட்டி சிம்பாவின் தந்தை முஃபாஸா மரணமடையும் காட்சி வர, அதனை பார்த்து அந்த நாய்க்குட்டி ஹான்னாவும் அழத் தொடங்கியது.
இதனை அந்த நபர் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். சில நொடிகளிலேயே இந்த வீடியோ வைரலாக பரவியது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்களுக்கும் உணர்வுகள் இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம் எனக் கூறி வருகின்றனர்.