வீடியோ: மோடி ரோடு ஷோ -வில் 'ஆப் கி பார், சாக்கோ பார்' முழக்கம்... பா.ஜ.க-வினரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி, சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவிற்கு கூடிய பா.ஜ.க தொண்டர்கள் "ஆப் கி பார்.. சாக்கோ பார்..." என்று முழக்கமிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி, சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவிற்கு கூடிய பா.ஜ.க தொண்டர்கள் "ஆப் கி பார்.. சாக்கோ பார்..." என்று முழக்கமிட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
PM Modi Road Show Chennai Netizens on BJP cadres Abki Baar  Chocobar video Tamil News

நேற்றுடன் 7-வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி சென்னை தியாகராயரில் (தி.நகர்) நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

PM Modi Road Show | Chennai: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

மோடி ரோடு ஷோ 

Advertisment

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஆளும் பா.ஜ.க-வின் முகமாக இருந்து வரும் பிரதமர் மோடி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார்.

நேற்றுடன் 7-வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி சென்னை தியாகராயரில் (தி.நகர்) நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, தென் சென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். வழியின் இருபுறங்களிலும் ஏராளமான பா.ஜ.க தொண்டர்கள், பிரதமர் மோடிக்கு மலர்களைத் தூவி வாழ்த்தி வரவேற்றனர்.

பிரதமர் மோடி பேரணி வந்த வாகனத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோர் உடனிருந்தனர். பிரதமரின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 3,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

கலாய்க்கும் இணையவாசிகள் 

Advertisment
Advertisements

இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவிற்கு கூடிய பா.ஜ.க தொண்டர்கள்  "ஆப் கி பார்.. சாக்கோ பார்..." என்று முழக்கமிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் மத்தியில் பெரும் சிரிப்பலையை கொண்டுவந்துள்ளது. சாக்கோ பார் என்பது ஒரு வகை ஐஸ் கிரீம் என குழந்தைகளுக்கு கூட தெரியும், இதுகூடவா பா.ஜ.க தொண்டர்களுக்கு தெரியவில்லை என இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Chennai Pm Modi road show

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: