பிரதமர் மோடியின் டுவிட்டர் பாஸ்வேர்ட் – சாதனைப் பெண்களின் செயலை டிரென்டிங் ஆக்கிய நெட்டிசன்கள்
Pm Modi women's day : பிரதமர் மோடியின் டுவிட்டர் பாஸ்வேர்டை கேட்ட சாதனை பெண்ணுக்கு, மற்றொரு பெண் உடனடியாக பதில் அளித்த நிகழ்வு, நெட்டிசன்களால், சமூகவலைதளங்களில் டிரென்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.
prime minister narendra modi, pm modi social media, pm modi women’s day, pm modi twitter handle, man asks pm modi twitter password, women achiever reply
பிரதமர் மோடியின் டுவிட்டர் பாஸ்வேர்டை கேட்ட சாதனை பெண்ணுக்கு, மற்றொரு பெண் உடனடியாக பதில் அளித்த நிகழ்வு, நெட்டிசன்களால், சமூகவலைதளங்களில் டிரென்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, பிரதமர் மோடி, தன்னுடைய டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள கணக்குகளை, 7 சாதனைப்பெண்களிடம் வழங்கி அவர் தம் கருத்துகளை பதிவிட வாய்ப்பு தந்திருந்தார். அதனை அப்பெண்களும் தங்களுக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பை சிறப்புற பயன்படுத்திக் கொண்டனர்.
மோடியின் சமூகவலைதள கணக்குகள் 7 சாதனைப்பெண்களிடம் வழங்கப்பட்டன. அதில் முதலாவதாக, மோடியின் டுவிட்டர் கணக்கை நிர்வகித்தவர் என்ற பெருமையை பெறுகிறார் தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி ஸ்னேகா மோகன்தாஸ்.
ஸ்னேகா மோகன்தாஸ், மோடியின் டுவிட்டர் பக்கத்தில், இயலாத மக்களுக்கு பசியாற்றிவரும் தனது அமைப்பின் நடவடிக்கைகள் உள்ளிட்ட நிகழ்வுகளை அவர் பதிவிட்டார். அவரது இந்த டுவிட்டுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.
அவரைத்தொடர்ந்து, விக்ராந்த் பகதூரியா மோடியின் டுவிட்டர் கணக்கை கையகப்படுத்தினார். அவர் இந்த டுவிட்டர் ஹேண்டிலின் பாஸ்வேர்ட் என்ன என்று வினவியிருந்தார். அதற்கு ஸ்னேகா மோகன்தாஸ், மோடியின் டுவிட்டர் கணக்கில் இருந்தே, New India…try logging in 🙂 என்று பதிவிட்டார்.