New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/21/GGU3VYyezD1zkmK0Fefm.jpg)
87 வயதிலும் நீச்சல் குளத்தில் நீந்தி ராமதாஸ் உற்சாகம்!
85 வயதாகும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது வீட்டின் நீச்சல் குள்ளத்தில் யோகா செய்து ஆனந்த குளியல் போட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
87 வயதிலும் நீச்சல் குளத்தில் நீந்தி ராமதாஸ் உற்சாகம்!
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் மனக்கசப்பு உள்ள நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், கடந்த 16-ம் தேதி பா.ம.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தைகூட்டினார். அடுத்த நாள் 17ம் தேதி மகளிர் அணி, இளைஞரணி அணி கூட்டத்தையும், கடந்த 19ம் தேதி மாநில வன்னியர் சங்க கூட்டத்தையும் கூட்டினார். இந்தக் கூட்டத்துக்கு கட்சி தலைவரும், ராமதாஸின் மகனுமான அன்புமணி அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால், கட்சியே இரண்டாக பிளவு பட்டிருக்கிறதோ, என தொண்டர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரிடையே சுமுகமான உறவை ஏற்படுத்திட தான் முயன்று வருவதாகவும், விரைவில் இரு தரப்புக்கும் இடையே நிலவும் கசப்புகள் மறையும் என்றும் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியிருந்தார்.
பா.ம.க-வுக்குள் சர்ச்சைகளும் சலசலப்புகளும் இருந்துவரும் வேளையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது 85 வயதில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக தனது வீட்டு நீச்சல் குளத்தில் நீச்சலடித்து யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். ராமதாஸ் நீச்சல் அடிக்கும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தைலாபுரத்தில் உள்ள தன் வீட்டில் யோகா செய்து, பல்ஸ் மீட்டரில் உடல்நலத்தை சோதித்தபடி நீச்சல் குளத்தில் இறங்கினார். நீச்சல் குளத்திலும் யோகா, வார்ம் செய்தபடி ராமதாஸ் நீச்சல் அடிக்கும் காட்சிகள் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.