வீடியோ: அழிக்க வைத்திருந்த பாட்டில்களை அள்ளிக் கொண்டு ஓடிய மதுப்பிரியர்கள்: திணறிப் போன போலீசார்!

ஆந்திராவில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை JCB இயந்திரம் கொண்டு அழிக்க முயன்றபோது அங்கே இருந்த மதுப் பிரியர்கள் அள்ளிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
liquor bottles

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் வாகன சோதனையின்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

ஆந்திராவில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை JCB இயந்திரம் கொண்டு அழிக்க முயன்றபோது அங்கே இருந்த மதுப் பிரியர்கள் அள்ளிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் வாகன சோதனையின்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Advertisment
Advertisements

ஆந்திராவில் பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த மதுபாட்டில்களை போலீசார் JCB இயந்திரம் கொண்டு அழிக்க முயற்சி செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை ஒரே இடத்தில் வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு மதுபாட்டில்களை JCB இயந்திரம் கொண்டு அழைக்க முயன்றபோது, அப்போது அந்த இடத்திற்கு முந்தியடித்து கொண்டு வந்த மதுபிரியர்கள் மதுபாட்டில்களைத் தூக்கிக்கொண்டு போலீசாரிடம் பிடிபடாமல்  ஒடினார்கள்.. 

அங்கே இருந்த போலீசார் மது பாட்டில்களை எடுத்துச் சென்ற மதுப்பிரியர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். அப்போது போலீசாரிடம் சிக்கிய ஒரு மதுப்பிரியர், வீணாக மண்ணில் அழிக்கப்படும் மதுபாட்டில்களை எங்களுக்கு கொடுக்கலாமே என்பது போல அவரது ரியாக்ஷன் இருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் JCB இயந்திரம் கொண்டு அழிக்க முயன்றபோது மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை எடுத்துக்கொண்டு ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: