scorecardresearch

அய்யோ, எனக்கு டெல்லி மேலிடத்தோட ஆதரவு இருக்கே.. கட்சி பெருசா, டெல்லி பெருசா?!

Latest Political Memes: அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்காக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே நடக்கும் வார் நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம தீனியாக அமைந்துள்ளது. நாகரிகமான மொழியில், நகைச்சுவையான அரசியல் மீம்ஸ்கள் கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும்.

அய்யோ, எனக்கு டெல்லி மேலிடத்தோட ஆதரவு இருக்கே.. கட்சி பெருசா, டெல்லி பெருசா?!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூறாவளியாக வீசிவரும் நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி வழக்கு, நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு அனுமதி, பிறகு, மேல்முறையீடு, விடியவிடிய விசாரணை, 23 தீர்மானங்களுக்கு மேல் நிறைவேற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகு, அதிமுக பொதுகுழு பரபரப்பாக நடக்கிறது.

அதிமுக பொதுக்குழுவைப் புறக்கணித்து ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் பொதுக்குழு கூட்டத்தைவிட்டு வெளியேறினார். பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் என பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்காக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே நடக்கும் வார் நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம தீனியாக அமைந்துள்ளது.

அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள் அதிமுக விவகாரத்தில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர். நாகரிகமான மொழியில், நகைச்சுவையான அரசியல் மீம்ஸ்களை கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும். சமூக ஊடகங்களில் இன்று கவனம் பெற்ற அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

மோஹன்ராம்.கோ என்ற ட்விட்டர் பயனர், அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடந்ததை கிண்டல் செய்தது விதமாக, “ஏன்ணே உங்க பையனை அடிக்கறீங்க? தேர்வில் கஷ்டமான கேள்வி எல்லாம் கேட்க கூடாதுன்னு கோர்ட்டுக்கு போகலாமான்னு கேட்கறான்” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.

பலேபாபு என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “கட்சி பிரச்னை , சினிமா ரிலீஸ் பிரச்சினைக்கு மட்டும் தாங்க உடனடியா விசாரிப்போம், மத்தபடி மக்கள் பிரச்சினைக்கெல்லாம் கோடை விடுமுறை ,கிறிஸ்துமஸ் விடுமுறை எல்லாம் முடியட்டும் ன்னு கேசை தள்ளி போட்டுடுவோம்” என்று எனக்கு எங்க அப்பான்னாதாங்க பயம் மற்றபடி லவ் எல்லாம் ஓகேங்க என்ற ஜெய் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்… மீண்டும் தருமம் வெல்லும் என்று தெரிவித்தது குறித்து, ஜால்ரா காக்கா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அதென்னப்பா உன் CM போஸ்ட், கட்சி தலைவர் போஸ்டிங்க்கு ஆபத்து வரும் போது மட்டும் தர்மத்தை சூது கவ்வுது???” என்று மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்து கலாய்த்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கில் உயர் நீதிமன்றம், பொதுகுழு நடத்தலாம், ஆனால், 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்கள் சேர்க்கக்கூடாது என்று இன்று காலை ஓ.பி.எஸ்-க்கு சாதகமான வகையில் தீர்ப்பு வந்தது. இதைக் குறிப்பிட்டு, நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “கிருபை….கிருபை…கிருபை.!! # OPS…..now..!!!” என்று மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.

நெல்லை அண்ணாச்சி மற்றொரு மீம்ஸில், அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று கோஷமிடுவதைக் கிண்டல் செய்யும் விதமாக, ஜெயலலிதா படத்தை பதிவிட்டு, “அடே…ய்…
தூங்க விடுங்கடா….!!! # அம்மா சமாதியில்.. மீண்டும்..!!!” என்று அதிமுகவினரைக் கிண்டல் செய்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பால், அதிமுக பொதுக்குழுவில், ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனதால், “எடப்பாடி நவ் ~ மா. பா. பாண்டியராஜன் காலில் விழுந்து கும்பிட்டதெல்லாம் வீணா போச்சே” என்று கிண்டல் செய்துள்ளார்.

அதிமுகவில் கடந்த 4 ஆண்டுகளாக ஒற்றைத் தலைமை பிரச்னை எழாமல் இருந்தது குறித்து, அதிமுகவுக்கு பாஜக தலைமை ஆதரவு இருப்பது குறித்தும், மன்னார் அண்ட் கம்பனி என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அப்படின்னா.. கடந்த நாலு வருசமா அக்னிபாத் திட்டத்தில்தான் அதிமுக இருந்திச்சா?!” என்று மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.

வசந்த் என்ற ட்விட்டர் பயனர், “அடேய் வனகரத்திலதானே பொதுக்குழு அது என் ஏரியாவுக்கு பக்கம்தான் நாளைக்கு முதல் ஆளா வந்துர்றேன்.” என்று அதிமுக பொதுக்குழுவின் களேபரங்களை வடிவேல் மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்றபொது கிழிக்கப்பட்டது, இது குறித்து சரவணன். எம் என்ற ட்விட்டர் பயனர், “இனிமே எப்படி பொதுக்குழு கூட்டத்தை நடத்தறாங்கன்னு பார்த்துடறேன்..

~ என்ன பண்ணே..!?

~ பேனரை கிழிச்சுட்டோம்ல்ல.. இனிமே எப்படி நடக்கும்..” என்று கிண்டல் செய்துள்ளார்.

சரவணன். எம் மற்றொரு மீம்ஸில் அதிமுக முன்னாள அமைச்சர் வளர்மதி பேசியது குறித்து, “ஈபிஎஸ் ~ “தலைவன் இருக்கிறான்; அவன் வெளியே வருவான்… வருவான்.. வருவான்னு நடுவுல ஏதாச்சும் மரியாதை இல்லாம அவன் இவன்னு சொன்னியா..!?

வளர்மதி ~ அது ஏதாச்சும் ஒரு ப்ளோவுல வந்திருக்கும்…” என்று கிண்டல் செய்துள்ளார்.

ஜோ என்ற ட்விட்டர் பயனர், அதிமுக பொதுக்குழு ஒற்றைத் தலைமை குறித்து எந்த திர்மானமும் நிறைவேற்ற முடியாமல் போனது குறித்தும், ஓ.பி.எஸ்-க்கு சாதகமாக நிகழ்வுகள் முடிந்தது பற்றி ‘சோ வாட்’ என்று மீம்ஸ் போட்டுள்ளார்.

ஜோ என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “பன்னீர் ~ என்னய அசிங்கப்படுத்துறதா நினைச்சி என் வேட்டியவே உருவுனாலும் அசர மாட்டேன்டா.. மானம்தானே போச்சு, பதவி முக்கியம்ல..” என்று மீம்ஸ் மூலம் ஓ.பி.எஸ்-ஐ கிண்டல் செய்துள்ளார்.

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, “இது ராணுவ கட்டுப்பாட்டை கொண்ட கட்சி” என்று கூறியதைக் குறிப்பிட்டு, யதார்த்தம் பாருங்கள் எப்படி அடித்துக்கொள்கிறார்கள் என்று மீம்ஸ் மூலம் ஜோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், ஓ.பி.எஸ்-க்கு டெல்லியில் பாஜக தலைமை ஆதரவு இருப்பதாகவும் இ.பி.எஸ்-க்கு கட்சி நிர்வாகிகள் ஆதரவு இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதைக் குறிப்பிடும் விதமாக ஜோ, “EPS ~ அடேய், எனக்கு கட்சி காரங்க ஆதரவு இருக்குடா..

OPS ~ அய்யோ, எனக்கு டெல்லி மேலிடத்தோட ஆதரவு இருக்கே..

கட்சி பெருசா, டெல்லி பெருசா??!” என்று கலாய்த்துள்ளார்.

ஜோ மற்றொரு மீம்ஸில், “~ தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில்…

OPS ~ என்ன தர்மமே வெல்லுமா?

~ அதான் இல்ல, திரும்பவும் சூதுதான் உன்ன கவ்வ போகுது..!!!” என்று ஓ.பி.எஸ்-ஐ கலாய்த்துள்ளார்.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “யோவ் ஓபிஎஸ்ஸு.. இப்ப எதுக்குயா அம்மா சமாதிக்கு போகனும்னு அழற..?

எடப்பாடி: சமாதிக்கு போகனும்னு அழுதது ஓபிஎஸ் இல்லப்பா.. நானு” என்று இ.பி.எஸ்-ஐ கிண்டல் செய்துள்ளார்.

அதிமுகவின அரசியல் வாரிசு இ.பி.எஸ் என்று விஜய் புதிய படத்தின் பாணியில், போஸ்டர் டிசைன் செய்யப்பட்டது குறித்து சப்பாணி என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அட” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே வசந்த் என்ற ட்விட்டர் பயனர், “’அக்னி பாதைக்கு எதிராக விவரம் தெரியாதவர்களே போராடுகிறார்கள்’ – மன்னார்குடி ஜீயர்

இவர தெரியாது. இவருதான் பாகிஸ்தான் போர்ல கலந்துகிட்டு இந்தியாவுக்கு வெற்றியை வாங்கி தந்தவரு.” என்று ஜீயருக்கு மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Political memes aiadmk general council meeting ops vs eps