நடக்கிறதை எல்லாம் பார்த்தா… ‘நகச்சுத்தி’ வந்த மாதிரி தெரியுதே..?!

அரசியல் மீம்ஸ்கள் நகைச்சுவையாக நாகரிகமான மொழியில் இருந்தால் மட்டுமே கட்சி பேதங்களைத் தாண்டி கவனத்தைப் பெறும். இன்று சமூக ஊடகங்களில் கவனம் பெற்ற மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

நடக்கிறதை எல்லாம் பார்த்தா… ‘நகச்சுத்தி’ வந்த மாதிரி தெரியுதே..?!

அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுபவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். அரசியல் மீம்ஸ்கள் நகைச்சுவையாக நாகரிகமான மொழியில் இருந்தால் மட்டுமே கட்சி பேதங்களைத் தாண்டி கவனத்தைப் பெறும். இன்று சமூக ஊடகங்களில் கவனம் பெற்ற மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

மீம்ஸ் கிரியேட்டர் இன்று மீம்ஸ் மழை பொழிந்திருக்கிறார். அவர் இன்று பதிவிட்டுள்ள அனைத்து அரசியல் மீம்ஸ்களையும் இங்கே தருகிறோம்.

“தமிழகத்தில் பாஜக வளரும் என்று கூறுவது எல்லாமே பகல் கனவுதான்!” என்று கே.வி.தங்கபாலு கூறியதற்கு, “மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்போம்’னு தமிழக காங்கிரஸ் கூறுவது மாதிரியா..?” என்று மீம்ஸ் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

தேமுதிக நகர செயலாளர்கள் கூட்டம்!- பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது என்ற செய்தி குறித்து, மயக்குநன், “நியாயப்படி… பிற கட்சிகளுக்கு ‘நகரா’ செயலாளர்கள் கூட்டம்னுதான் சொல்லணும்..!” என்று கவுண்டர் மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.

“சட்டப்பேரவைக்கு ‘உள்ளேயும், வெளியேயும்’ பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான்!” என்று ஓபிஎஸ் கூறியதற்கு, “அப்ப… ‘மத்தியில்’ உள்ள கட்சி கிடையாதா..?!” என்று மயக்குநன் மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

“பாஜகவின் பொறுமைக்கும் எல்லை உண்டு!- பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி” கூறியதற்கு, “எல்லையில் சீனா கிராமம் கட்டுற அளவுக்கா..?!” என்று கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

“சசிகலா யார் என்றே தெரியாது” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, “அதுசரி… நிமிர்ந்து பார்த்துருந்தாதானே யார்னு தெரிஞ்சிருக்கும்..?!” என்று மயக்குநன் கிண்டல் செய்துள்ளார்.

“யார் வழக்கு தொடுத்தாலும் பின்வாங்க மாட்டோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, “’வாய்தா’ மட்டும்தான் வாங்குவீங்களா ஆபீசர்..?!” என்று கவுண்டர் வாய்ஸ் மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

“எனக்கு பெரிய பட்டங்கள் எதுவும் வேண்டாம்!” என்று கமல்ஹாசன் கூறியதற்கு, “சரிங்க ‘ஆண்டவரே’..!” என்று மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.

“அதிமுகவில் என்னை ‘ஓரம் கட்ட’ முடியாது” என்று ஓபிஎஸ் கூறியதற்கு, “மத்தியில் செல்வாக்கு இருக்கிற தைரியத்தில் சொல்றீங்களா தலைவரே..?!” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.

“நகமும், சதையும் போல் ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் செயல்படுகின்றனர்!” அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியதற்கு, “நடக்கிறதை எல்லாம் பார்த்தா… ‘நகச்சுத்தி’ வந்த மாதிரி தெரியுதே..?!” என்று மயக்குநன் மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

“அதிமுக, திமுக ஆகிய இரு ஆட்சிகளும் ஒன்றுதான்” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியதற்கு, “இதைக் கண்டுபிடிக்கத்தான் அவிய்ங்க கூட மாத்தி மாத்தி கூட்டணி வச்சீங்களாக்கும்..?! ” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.

“புதுசா முதலைக்குட்டி கதை எல்லாம் சொல்றேப்பா… இதுக்கு ஆமைக்கறி கதையே தேவலைப்பா..!” என்று சீமானை மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.

“நான் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து சென்றதற்கு தொண்டர்கள்தான் காரணம்” என்று ஓபிஎஸ். கூறியதற்கு, “கரெக்டா சொல்லுங்க வாத்தியாரே… தொண்டர்களா… டெண்டர்களா..?” என்று மயக்குநன் மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

மயக்குநன் மற்றொரு மீம்ஸில், “சசிகலாவை அதிமுகவில் சேர்க்கச் சொல்வது தேசவிரோதம் அல்ல!” என்று ஓபிஎஸ் கூறியதற்கு, “ஒருவழியா பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு போல..?!” என்று கிண்டல் செய்துள்ளார்.

“அதிமுகவைப் பிளவுபடுத்த எம்ஜிஆர்- ஜெயலலிதா தொண்டர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்” என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறியதற்கு, “அது… ஓபிஎஸ்- இபிஎஸ் தொண்டர்களுக்கு தெரியணுமே..?!” பருத்திவீரன் செவ்வாழை மீம்ஸ் போட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.

“மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டுவதில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை!” ஜே.பி.நட்டா கூறியதற்கு, “அந்த விஷயத்தில் பாஜக மீதே நம்பிக்கையில்லை ஜீ..!” என்று மயகுநன் மீம்ஸ் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

“பாஜக ஆட்சியில் மக்களின் வாழ்க்கை மாறியுள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, “மாறியுள்ளதா… நாறியுள்ளதா..?!” என்று கிண்டல் செய்துள்ளார்.

“ஒரு தனிப்பட்ட ஆதிக்கத்தின் கீழ் கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என்றுதான் தர்மயுத்தம் நடத்தினோம்” என்று ஓபிஎஸ் கூறியதற்கு, “இப்ப மட்டும் என்ன வாழுதாம்… டெல்லி ஆதிக்கத்தின் கீழேதானே இருக்கு..?!” என்று மயக்குநன் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Political memes aiadmk ops vs eps bjp dmk

Exit mobile version