அய்யோ அந்த பக்கம் இ.பி.எஸ் பெரியப்பா… இந்த பக்கம் ஓ.பி.எஸ் சித்தப்பா என்ன பண்றது தெரியலையே!

அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுபவர்கள் நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். அரசியல் மீம்ஸ்கள் நாகரிகமான மொழியில் இருந்தால் கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும்.

அய்யோ அந்த பக்கம் இ.பி.எஸ் பெரியப்பா… இந்த பக்கம் ஓ.பி.எஸ் சித்தப்பா என்ன பண்றது தெரியலையே!

சமூக ஊடகங்களின் காலத்தில் அரசியலை நையாண்டி செய்வதற்கு மீம்ஸ்கள் ஒரு புதிய வடிவமாக வளர்ந்து கோலோச்சி வருகின்றன. நீங்களும் ஒரு அரசியல் மீம்ஸ் கிரியேட்டர் ஆகலாம். அதற்கு, நகைச்சுவை படங்களைப் பார்க்கும் பழக்கம், நாகரிகமான மொழி, அரசியல் புரிதல் இருந்தால் போதும்.

அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுபவர்கள் நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். அரசியல் மீம்ஸ்கள் நாகரிகமான மொழியில் இருந்தால் கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும். சமூக ஊடகங்களில் இன்று கவனம் பெற்ற அரசியல் மீம்ஸ்களைத் தொகுத்து தருகிறோம்.

இன்றும் அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம், ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல், அதிமுக விவகாரத்தில் சீமானின் கருத்து, டெல்லியில் ஜூபைரின் கைது ஆகியவை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனியாகி இருக்கிறது.

பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவின் சொந்த கிராமத்தில் இன்னும் மின்சார வசதி இல்லை என்ற செய்தி குறித்து, வசந்த் என்ற ட்விட்டர் பயனர், “நீ கவர்னர் ஆகி என்ன பண்ணுவ… சனாதன தர்மம் பற்றி பிரச்சாரம் பண்ணுவேன் டீச்சர்.” என்று வடிவேலு மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.

இந்திய அரசு சீனாவின் செயலிகளைத் தடை செய்தது குறித்து, நானு பட்டிக்காட்டு பொண்ணையா என்ற பெயரில் உள்ள டிவிட்டர் பயனர், வடிவேலு குரலில், “நல்ல வேல அமெர்க்கா காரன்கூட சண்டை போடல, போட்டுறுந்தா, FB, Whatsapp, twitter எல்லாம் போயிருக்கும்…. அப்புறம் எதுக்கு போன் யூஸ் பன்னிகிட்டு தூக்கி குப்பைலதான் போடனும்னு தோணும்” என்று கிண்டல் செய்துள்ளார்.

நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “’குட்டி மோடி’யாக மாற ஆசைப்படுகிறார் மு.க. ஸ்டாலின்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, “# யாரு….மோடி…மாதிரி…!!!” என்று கேட்டு சட்டமன்றத்தில் உதயநிதி, முக ஸ்டாலின் சிரிக்கும் புகைப்படத்தை மீம்ஸாகப் போட்டு கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே நடந்து வரும் ஒற்றைத் தலைமை மோதல் விவகாரத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்தப் பக்கம் நிற்பதென்று தெரியாமல் நிற்கிற பிள்ளைகளாக இருக்கிறோம் என்று கூறியது குறித்து, “மோகன்ராம்.கோ என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், சீமான், அனைத்து தலைவர்களையும் உறவு முறைகொண்டு அழைப்பதால், அதை வைத்து, “கடைக்காரரே, எந்த சித்தப்பா பக்கம் சேர்றதுன்னு தெரியாம நிற்கறாரு எங்க அண்ணன்…

உங்க அண்ணன் என்ன பெரிய வெண்ணையா? காசு கொடுத்தா எந்த சித்தப்பா பக்கம் வேணும்னாலும் போவாரு, உங்க அண்ணன்” என்று கிண்டல் செய்துள்ளார்.

டாக்டர் கார்த்திக் சுப்புராஜ், பி.கா, எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அய்யோ அந்த பக்கம் இ.பி.எஸ் பெரியப்பா… இந்த பக்கம் ஓ.பி.எஸ் சித்தப்பா…! என்ன பண்ணறது தெரியலையே..?” என்று சீமானின் நிலைப்பாட்டை நகைச்சுவையாக கலாய்த்துள்ளார்.

இதனிடையே, ஜோ என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், ஆளும் பாஜகவின் தவறுகளை சுட்டிக்காட்டிய ஆல்ட் நியூஸ் ஜுபைர் 218 ஆம் ஆண்டு ட்விட்டர் பதிவுக்கு கைது செய்திருப்பது குறித்து செய்தி வெளியிடாத மீடியாக்கள் பற்றி “முகம்மது ஜுபைர அரெஸ்ட் பண்ணிட்டாங்களே, அதை பத்தி எதாவது நியூஸ் போட்டியா?

மீடியா ~ அதை பத்திலாம் போட முடியாது,வேணும்னா பஜ்ஜி கடையில ஏதாவது திமுக காரன் சண்ட போடுவான். அதை பத்தி வேணா போடுறேன்.” என்று மீம்ஸ் மூலம் மீடியாக்களை விளாசியுள்ளார்.

ஜோ மற்றொரு மீம்ஸில், “அண்ணா, ராம ராஜ்ஜியம்னா என்னண்ணா?!

~ தப்பு செஞ்சவன விட்டுட்டு அந்த தப்பை சுட்டிக்காட்டுறவனுக்கு தண்டனை குடுக்குறதுதான் மா..” என்று பாஜகவினர் கூறும் ராம ராஜ்ஜியத்தை மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.

ஜோ இன்னொரு மீம்ஸில், “காங் ~ 2024 ல நாம தோத்துட்டா கூட 2029ல நாம ஜெயிச்சு ஆட்சிக்கு வந்துரலாம்.

ஜீ ~யார்றா இவன், 2024 ல நாங்க விண் பண்ணதுக்கு அப்புறம் எலெக்சன்ங்குற கான்செப்ட்டே இருக்காதேடா.. போடா அந்தாண்ட..” என்று காங்கிரஸை இடித்துரைத்துள்ளார்.

மாலை கடை மொதலாளி என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், ஜுபைரை கைது செய்திருப்பது குறித்து, “இப்படியே கைது பண்ணி கைது பண்ணி கடைசியில ஆள் இல்லாத ஊர் வாய அடைக்க அர்னாப்கிட்ட வந்து நிக்க போறானுங்க….” என்று மீம்ஸ் மூலம் பாஜக அரசை கிண்டல் செய்துள்ளார்.

ஜால்ரா காக்கா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், அதிமுக பொதுக்குழு கூட்டுவதற்கு ஓ.பி.எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு, “OPS~போப்பா போ என் பொனத்தை தாண்டி தான் பொதுக்குழுவை கூட்டனும்” என்று கூறுவதாக மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.

இதயவன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அதிமுக அயோக்கியர்களின் கூடாரமாக மாறிவிட்டது” என்று டிடிவி தினகரன் கூறியதற்கு, “எப்ப இருந்து கூவத்தூர் ஹெட் கோர்ட்டர்ஸ் நீங்க திறந்து வைச்சதுக்கு அப்புறம் தான?!” என்று மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

இதயவன் மற்றொரு மீம்ஸில், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெறுவோம்” என்று சசிகலா கூறியது குறித்து, “அனைவரும் னா திமுகவையும் சேர்த்தா?!” என்று கேட்டு கவுன்ட்டர் கேள்வி கேட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Political memes aiadmk ops vs eps seeman bjp

Exit mobile version