சில நேரங்களில் அரசியல் விளையாட்டாகவும், விளையாட்டு அரசியலாகவும் மாறிவிடுகின்றன. அப்படி, ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், பாஜக எதிர்ப்பு நெட்டிசன்கள், இதையும் அரசியலாக விமர்சித்து வருகின்றனர்.
அரசியலில் தினசரி என்ன நடந்தாலும் உடனடியாக எதிர்வினையாற்றுபவர்கள் நம்ம மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். இவர்கள் தங்களின் ஒரு மீம்ஸில் அரசியல்வாதிகளை ஜாலியாக அங்குசம் போல குத்தி தெறிக்கவிடுவார்கள். சில நேரங்களில் அவர்களையே சிரிக்க வைக்கவும் செய்வார்கள். இன்று மீம்ஸ் கிரியேட்டர்கள் சாட்டையை சுழற்றி இருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் இன்று கவனம் பெற்ற மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “பிரதமரின் கூட்டத்திற்கே வராத தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பிரதமரின் கூட்டத்தில் பாதியில் எழுந்து சென்ற மம்தா பானர்ஜி” ஆகியவற்றைக் குறிப்பிட்டு, அரசியல்ல இதெல்லா சாதாரணமப்பா என்று கலாய்த்துள்ளார்.
கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர், மத்திய அரசு ஆதார் நகலை ௭ங்கும் அளிக்க வேண்டாம் என்று அறிவித்ததைக் குறிப்பிட்டு, “மக்கள் – பான் கார்டு, வங்கி கணக்கு, ரேசன் கார்டுல இணைக்கச் சொன்னது.. அது போன மாசம் வரைக்கும்.. நான் இப்ப சொல்றது… இந்த மாசம்..” என்று கைப்புள்ள வடிவேலு மீம்ஸ் போட்டு மத்திய அரசை ஜாலியாக மசாஜ் செய்துள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத்தின் புதிய படத்தைக் குறிப்பிட்டு, “நாடு முழுவதும் வெறும் 20 டிக்கெட்டுகள் மொத்தமே ரூ.4 ஆயிரம் மட்டுமே வசூல். கங்கனா படத்துக்கு வந்த பரிதாப நிலை ” என்ற செய்தியைக் குறிப்பிட்டு, மக்கள் சொல்வதாக “ஏய்! நீ பாஜகவுக்கு கூஜா தூக்கும் போதே தெரியும்.. நீ இந்த மாதிரி பல்பு வாங்குவன்னு..” என்று கலாய்த்துள்ளார்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “பாமக தலைவராக பொறுப்பேற்று கொண்ட அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் ஸ்டாலினையும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடியையும் சந்தித்து ஆசி பெற்றார்.” என்று செய்தியைக் குறிப்பிட்டு, டாக்டர் ராமதாஸ் சொல்வதாக “# ராமதாஸ் டு அன்புமணி : நான் நல்லா பண்றனோ இல்லையோ, நீ நல்லா பண்றடா மகனே..” என்று கிண்டல் செய்துள்ளார்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? ட்விட்டர் பயனர், HDFC வங்கியில் 100 பேர் வங்கி கணக்கில், தவறுதலா தலா 13 கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்ட செய்தியைக் குறிப்பிட்டு, “HDFC பேங்க்ல 100 பேர் அக்கவுன்ட்ல தவறுதலா தலா 13 கோடி ரூபாய் பணம் வரவு வைச்சுட்டாங்களாம். # ஐயோ அந்த பேங்க்ல நான் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணாம போயிட்டனே..” என்று திருவிளையாடல் தருமி நாகேஸ், ஐயோ ஆயிரம் பொன்னாச்சே ஆயிரம் பொன்னாச்சே என்று நகைச்சுவையாக புலம்பியுள்ளார். அதே நேரத்தில், வங்கியின் கவனக் குறைவையும் கலாய்த்துள்ளார்.
டீ என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், 15வது ஐபிஎல் தொடரில், புதியதாக பங்கேற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதைக் குறிப்பிட்டு, “சரி சரி.. இந்த வருசம் குஜராத், அடுத்த வருசம் லக்னோ. கூட்டம் போடாத கிளம்பு கிளம்பு.” என்று விளையாட்டில் அரசியல் பேசியுள்ளார்.
சப்பாணி என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “குஜராத் டைடன்ஸ் ஜெயித்ததை வைத்து குஜராத் மாடல்னு வருவானுக டோழி.. நம்பிடாதீங்க” என்று வில்லங்கமாக விளையாட்டில் அரசியல் பேசி மீம்ஸ் போட்டுள்ளார்.
Msd இதயவன் என்ற ட்விட்டர் பயனர், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, இந்தியா மோடியால் தான் வலிமை பெற்றது” என்று கூறியதற்கு, அஜித்தின் வலிமை படத்தைக் குறிப்பிட்டு, “அப்ப போனி கபூரால் இல்லையா ?!” என்று மீம்ஸ் மூலம் சுறுக்கென்று குத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“