அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் வேகமாக தங்கள் மீம்ஸ் மூலம் எதிர்வினையாற்றுபவர்கள்தான் மீம்ஸ் கிரியேட்டர்கள். இன்றைக்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் அரசியல்வாதிகளின் கருத்துக்கு ஏகத்துக்கு சாட்டையை சுழற்றி இருக்கிறார்கள். மீம்ஸ் என்றால் அது நகைச்சுவையாகவும் இருக்க வேண்டும், சுறுக்கென்று குத்துவதாகவும் இருக்க வேண்டும். அதைவிட நாகரிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான், கட்சி பேதம் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி கவனம் பெறும்.
சமூக ஊடகங்களில் இன்று கவனம் பெற்ற நல்ல மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையில் தலைமையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தினார்கள். அப்போது, அண்ணாமலை அங்கே இருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றதைக் குறிப்பிடு மீம்ஸ் போட்டுள்ளனர்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச? என்ற ட்விட்டர் பயனர், வடிவேலு மீம்ஸ் போட்டு, “தைரியம் இருந்தா என் ஏரியா பக்கம் வாடா..” என்று கூறுவதாக கலாய்த்துள்ளார்.
மற்றொரு மீம்ஸில், “திமுக அரசின் ஊழல் ஆதாரங்கள் 2 நாட்களில் வெளியிடப்படும் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை # தோ கிலோ மீட்டர்..” என்று கிண்டல் செய்துள்ளார்.
புதியதாக பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி, “பாமகவுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்” என்று கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச? என்று கிண்டல் செய்துள்ளார்.
அண்ணாமலை கற்றவர், கல்வியாளர், கோபப்பட்டு அவேசமாக பேசமாட்டார் என்று சீமான் கூறியதற்கு, “அண்ணாமலை டூ அதிபர்- அந்த ஆமைக் கதையை அண்ணன் எடுத்துக்கிட்டேன்…” என்று மோஹன்ராம்.கோ மீம்ஸ் மூலம் சீமானையும் அண்ணாமலையும் கலாய்த்துள்ளார்.
மோஹன்ராம்.கோ தனது மற்றொரு மீம்ஸில், “பேசாம அரசாங்கத்தை எங்ககிட்ட கொடுத்துடுங்க, ஏன், தேர்தல்ல ஜெயிக்க முடியலையா?, எதே, ஆமா…” என்று கிண்டல் செய்துள்ளார்.
கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர், “ஆமை புகுந்த வீடு உருப்படாதுனு சொல்லுவாங்க.. இப்ப ௭ன்னடான்னா ஆளாளுக்கு ஆமைக் கதைய தூக்கிட்டு திரியிரானுங்க.. ” சீமானைக் கலாய்த்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “பாஜக வில் … ராம்குமார் சிவாஜி… # அடேய்…. எட்டப்பா….!!!!” என்று சிவாஜியின் குரலிலேயே கிண்டல் செய்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “”அண்ணாமலை கற்றவர். கல்வியாளர். நிதானமானவர். ஆவேசமோ கோவமோ வராது பத்திரிகையாளர்கள் மனது காயப்பட்டிருந்தால் வருத்தத்திற்கு உரியதுதான்.. சீமான் பார்த்து பக்குவமா…. ஊதுங்க..ஜி…!!!” என்று கிண்டல் செய்துள்ளார்.
தனது மற்றொரு மீம்ஸில் திருநெல்வேலி வட்டார வழக்கில் எப்படி பேசுகிறார்கள் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் மீம்ஸ் போட்டு சிரிக்க வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“