தமிழ்நாடு அரசியலில் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு மையமாக இருந்த கலைஞர் மு கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்றைக்கு கலைஞர் கருணாநிதியைப் புகழ்ந்து நிறைய மீம்ஸ்களைப் போட்டுள்ளனர். மீம்ஸ் கிரியேட்டர்கள் வெறுமனே அரசியல் தலைவர்களை விமர்சிப்பதற்காக மட்டுமே மீம்ஸ்கள் போடப்படுகின்றன.
மீம்ஸ் கிரியேட்டர்கள் இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கு வேகமாக சாட்டையைச் சுழற்றி உள்ளனர். இன்று கவனம் பெற்ற அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
பாக்டீரியா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “விதவை என்று எழுதுகிறேன். எழுத்தில்கூட பொட்டு வைக்க முடியவில்லை. சமுதாயம் மட்டுமல்ல மொழிகூட பென்களை வஞ்சித்துவிட்டது. விதவை என்பது வடமொழிச்சொல் தமிழில், ‘கைம்பெண்’ என்று எழுதினால், ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம், தமிழ் வஞ்சிக்காது வாழ வைக்கும்” என்று கலைஞரின் பொன்மொழியை மீம்ஸ் போட்டு கூறியுள்ளார்.
சரவணன். M என்ற ட்விட்டர் பயனர், “சமூக நீதின்னா என்னன்னா..? கலைஞர் மா..!” என்று கலைஞர் பிறந்தநாளில் அவரை புகழ்ந்து மீம்ஸ் போட்டுள்ளார்.
அடுத்த மீம்ஸிலேயே பாக்டீரியா பாஜகவை எதிர்க்கும் மீம்ஸ் போட்டுள்ளார். அதில், ராமாயணம் நமக்கு கூறும் நல்ல என்று சங்கிகள் சொல்ல, ஹலோ சங்கி, “இரு… வால்மீகி ராமாயணமா, துளசிதாஸ் ராமாயணமா, கம்பராமாயணமா, இதுல எந்த ராமாயணம் உண்மையான ராமாயணம், ராமனோட கதை, அதை முடிவு பண்ணிட்டு சொல்லு…” என்று கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
பாபநாசம் படத்தின் மீம்ஸ் போட்டு கட்டனூர் சேக், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கலாய்த்துள்ளார்.
“ஆளாளுக்கு ஒன்ன பேசணும்… ஆனா, ஒரே மாதிரி பேசணும்… தப்பித்தவறி கூட பொதுமக்கள் யாரும் நம்ம மோடி ஆட்சியின் தோல்வியைப் பத்தி பேசாமல் இருக்கணும் ஓ.கே…” கட்டனூர் சேக் என்று கலாய்த்துள்ளார்.
கட்டனூர் சேக் மற்றொரு மீம்ஸில், “பாஜகவில் இணைந்தார் ஹர்திக் பட்டேல் - செய்தி… ஐபிஎல்ல குஜராத் அணி ஜெயிக்கும் போதே தெரியும்டா.. நீ பாஜகவுல இணைஞ்சிருவனு..” என்று ஹர்திக் பட்டேலை கிண்டல் செய்துள்ளார்.
டீ இன்னும் வரலை என்ற பெயரில் ட்விட்டர் பயனர், யார் மீது என்ன கோபமோ தெரியவில்லை, “எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது …ணே இருந்தா மட்டும் அப்டியே அறுத்து தள்ளிருவியா…நீ” என்று கேட்டு வடிவேலுவை கோபமாக முறைத்துள்ளார்.
கோவிந்தராஜ் என்றா பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், ரஜியின் பாஷா படத்தின் புகழ்பெற்ற வசனமான, “#கெட்டவங்களுக்கு நிறையா குடுப்பான், ஆனா கை விட்ருவான், நல்லவங்களுக்கு எதுவுமே குடுக்கமாட்டான், ஆனா கைவிடமாட்டான்…” என்ற வசனத்தைக் குறிப்பிட்டு, “மண்டக்கோளாறு உள்ளவன் லூசு பய” என்று கிண்டல் செய்துள்ளார்.
கமல்ஹாசனின் விக்ரம் படம் ரீலிசானது. காலையிலேயே விக்ரம் படத்தின் விமர்சனம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியானது. அது அவ்வளவு சீக்கிரமா படத்தை பார்த்துவிட்டீர்கள் என்று கேள்வி எழும் விதமாக இருந்தது. மோஹன்ராம். கோ என்ற ட்விட்டர் பயனர் இதை குறிப்பிட்டு, “ஏம்ப்பா, படம் பார்க்காமலே, பார்த்த மாதிரி விமர்சனம் பண்ணுவாங்களே, அவங்க போயிட்டாங்களா?” என்று வடிவேலு மீம்ஸ் போட்டுள்ளார்.
அதே போல, கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச? என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “வீரபாகு.. யோவ் வீரபாகு... என்னய்யா? விக்ரம் படம் நல்லா இருக்குன்னு உன் மகன் ட்வீட் போட்டுருக்கான்.. உண்டா இல்லையான்னு சீக்கிரம் கேட்டு சொல்லு மனுசனுக்கு ஆயிரம் வேலை கிடக்குல்ல... படம் நல்லா இருக்குன்னு ட்வீட் போட்டானா..? ராத்திரி முழுக்க நம்ம கூட தானே இருந்தான்..” கிண்டல் செய்துள்ளார்.
“தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவிற்கு நல்லதல்ல” என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியது குறித்து, இன்று ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொன்னையனின் கருத்து தனிப்பட்ட கருத்து என்று ஓ.பி.எஸ் கூறினார்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், இதைக் குறிப்பிட்டு அப்ப நீங்க சொல்றதெல்லாம்..? என்று கேள்வி கேட்டு, “அது வாயை பாஜகவுக்கு வாடகைக்கு விட்டு அவங்க சொல்ற கருத்து..” கடுமையாக விமர்சித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.