அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு வேகமாகவும் உடனுக்குடனும் பதிலடி கொடுத்து சாட்டையை சுழற்றுவது சமூக ஊடகங்களில் வெளியாகும் மீம்ஸ்கள் முன்னிலை வகிக்கின்றன. நல்ல நகைச்சுவை உணர்வும் நாகரிகமான அதே நேரத்தில் ஈட்டியைப் போல வார்த்தைகளும் அரசியல் அறிவும் இருந்தால் போதும் நல்ல மீம்ஸ் கிரியேட்டர்களாகவும் ஆகிவிடலாம். அதே நேரத்தில், அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வர வேண்டும்.
கடந்த ஏப்ரல் மாதம்தான் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தினார்கள், என்றால் இந்த மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இந்த மாதம் சிலிண்டர் விலையை உயர்த்தியதை மறந்துவிட்டார்களோ என்னவோ இன்றைக்கு வீடு உபயோக சிலிண்டர் விலை மேலும் ரூ. 3 உயர்த்தி இருக்கிறார்கல். சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு, பலரும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர் சிலிண்டர் விலை உயர்வு குறித்து பாஜக ஆதரவு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வாய் திறக்காததைக் கண்டித்து ஒரு மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
அதில், “௭ன்னப்பா.. இன்னைக்கும் வணிக சிலிண்டர் விலை ரூ. 8 ம், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 3ம் உயர்ந்திருக்கு இதைப்பற்றி பேசுங்க, போராட்டம் பண்ணுங்க.. சங்கி – விலைய ஏத்துனது ஜீ.. யா இருந்தா.. செத்தாக் கூட பேசக்கூடாது..” சசிகுமார் டயலாக்கை மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
டிஆர் காயத்ரி ஸ்ரீகாந்த் என்ற ட்விட்டர் பயனர், போட்டுள்ள மீம்ஸில், ஜி.எஸ்.டி முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை வரவேற்றுள்ளார்.
சசிகலா அதிமுகவைக் காப்பாற்ற உகந்த நேரம் வந்துவிட்டது என்று கூறியதற்கு மயக்குநன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அதிமுகவைக் அப்ப… அமமுகவோட நேரம் முடியப் போகுதுன்னு சொல்லுங்க…!” என்று மீம்ஸ் மூலம் கவுண்ட்டர் கொடுத்துள்ளார்.
“தொலைநோக்கியில் தேடினாலும் பிரதமர் மோடி போன்ற தலைவர் ஒருவர் கிடைக்கமாட்டார்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு, மயக்குநன் மற்றொரு மீம்ஸில், ‘அமிதாப் மாமா’ மாதிரி அடிக்கடி ஜி கெட்டப்பை மாத்திக்கிட்டே இருக்கிறதால, உங்களுக்கு கண்டுபிடிக்கத் தெரியல ஜி..! என்று கலாய்த்துள்ளார்.
amudu என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “6 வது முறையாக எனது அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை” என்று கார்த்திக் சிதம்பரம் கூறியதற்கு, “வருமானத்திற்கு மீறி நெட்ஃபிளிக்ஸ் பார்த்த புகாராக இருக்குமோ.?” மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், இந்திய எல்லை அருகே சீனா புதிய பாலம் கட்டுவதையும் அதற்கு இந்தியா, வடிவேல் குரலில் போதும் இதோட நிறுத்திக்க… என்று கலாய்த்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“