/tamil-ie/media/media_files/uploads/2022/05/lpg-gas-memes.jpg)
Tamil Political Memes: சாமானிய நெட்டிசன்கள் முதல் அரசியல் கட்சி நெட்டிசன்கள் வரை கைகளில் ஆளுக்கொரு சாட்டையை வைத்திருக்கிறார்கள். அன்றாட அரசியல் நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் மீம்ஸ்களால் விளாசுகிறார்கள். சன்டேவில் மீம்ஸ் சாட்டையை ஏகத்துக்கும் சுழற்றி இருக்கிறார்கள்.
சன்டே விடுமுறையில் வீட்டில் இருக்கும் வலைப் போராளிகள், சமூக ஊடக வாசிகள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, என அனைவரும் தங்கள் மீம்ஸ் கிரியேட்டிவிட்டியை என்று கொஞ்சம் அதிகமாகவே காட்டியிருக்கிறார்கள்.
மோடி உரக்க பேசினால் அமெரிக்காவே கேட்கும் -அண்ணாமலை.
— திராவிட போராளி (@ponthilaka12) May 15, 2022
ஆனா, கேஸ் கம்பனிகாரனுக்கு கேட்கலியே அண்ணாமலை. pic.twitter.com/ml39DM7o3z
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மோடி உரக்க பேசினால் அமெரிக்காவே கேட்கும் என்று கூறியதற்கு, பொன் திலகா என்ற ட்விட்டர் பயனர், “ஆனா, கேஸ் கம்பனிகாரனுக்கு கேட்கலியே அண்ணாமலை” என்று கம்மெண்ட் அடித்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “மோடி உரக்க பேசினால் அமெரிக்காவே கேட்கும் என்ற அண்ணமலையின் கருத்துக்கு, மற்றபடி, மைக்குக்குதான் கொஞ்சம் பயப்படுவாரு” என்று கலாய்த்துள்ளார்.
மோடி உரக்க பேசினால் அமெரிக்காவே கேட்கும் - அண்ணாமலை
— சரவணன். 𝓜 (@saravankavi) May 15, 2022
மொதல்ல பேச சொல்லுய்யா.. pic.twitter.com/UPSXeC5e3c
அதே போல, சரவணன். M என்ற ட்விட்டர் பயனர், “மொதல்ல பேச சொல்லுய்யா…” என்று கம்மெண்ட் அடித்துள்ளார்.
பாக்டீரியா என்ற பெயரில் உள்ள டிவிட்டர் பயனர், “கொஞ்சம் மெதுவா பேச சொல்லுடா சீனாக்காரனுக்கு கேக்குதானு பாப்போம்” என்று கடுமையாக கம்மெண்ட் அடித்துள்ளார்.
பிரதமர் மோடி ஓட்டுக்காக அரசியல் செய்வது இல்லை!- அமித்ஷா.
— மயக்குநன் (@LAKSHMANAN_KL) May 15, 2022
ஆமாமா... போட்டோஷூட் மட்டும்தான் செய்வாரு..! pic.twitter.com/dznQSEmRZT
பிரதமர் மோடி ஓட்டுக்காக அரசியல் செய்வது இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது குறித்து ட்விட்டர் பயனர் மயக்குநன், “ஆமாமா… போட்டோஷூட் மட்டும்தான் செய்வாரு…!” என்று ஜாலியாக கம்மெண்ட் அடித்துள்ளார்.
மத்திய அரசின் எந்த திட்டத்திற்கும் மோடி தனது பெயரை வைத்தது கிடையாது! அண்ணாமலை.
— மயக்குநன் (@LAKSHMANAN_KL) May 15, 2022
ஆமாமா... கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அம்பானி, அதானி பேர் வச்சதோடு சரி..! pic.twitter.com/KOiL0cuLu4
மயக்குநன் தனது மற்றொரு ட்வீட்டில், மத்திய அரசின் எந்த திட்டத்திற்கும் மோடி தனது பெயரை வைத்தது கிடையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதற்கு ஒரு கவுண்ட்டர் மீம் டயலாக் மீம் போட்டுள்ளார். அதில், “ஆமாமா… கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அம்பானி, அதானி பேர் வச்சதோடு சரி…!” என்று மீம்ஸால் தெரிக்கவிட்டுள்ளார்.
2 இந்தியாக்களை உருவாக்குகிறார் பிரதமர் மோடி!- ராகுல்.
— மயக்குநன் (@LAKSHMANAN_KL) May 15, 2022
அந்த இன்னொரு இந்தியாவுக்கு நீங்க பிரதமரா ஆயிட வேண்டியதானே ஜீ..?! pic.twitter.com/nmrDsvIRKy
மயக்குநன் பாஜகவையும் மோடியையும்தான் வெளுத்து வாங்குகிறார் என்று பார்த்தால், பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்தி, “2 இந்தியாக்களை உருவாக்குகிறார் பிரதமர் மோடி” என்று கூறியதற்கு, அந்த இன்னொரு இந்தியாவுக்கு நீங்க பிரதமரா ஆயிட வேண்டியதானே ஜீ..?!” என்று மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்துள்ளார்.
என் சொந்தக் காரணங்களுக்காகவே காங்கிரஸில் இருந்து விலகினேன்!- காங்கிரஸ் முன்னாள் எம்பி நடிகை ரம்யா.
— மயக்குநன் (@LAKSHMANAN_KL) May 15, 2022
சொந்தக் காரணத்தினாலா...
'நொந்த'க் காரணத்தினாலா..?! pic.twitter.com/7FowjMPJFo
காங்கிரஸ் கட்சிக்கு அனைவரும் கடன்பட்டுள்ளோம்!- சோனியா.
— மயக்குநன் (@LAKSHMANAN_KL) May 15, 2022
'வாராக்கடன்'தானே..?! pic.twitter.com/ymQUylBWFi
அதே போல், முன்னாள் எம்.பி நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது குறித்து, காங்கிரஸ் கட்சிக்கு அனைவரும் கடன்பட்டுள்ளோம் என்று சோனிகாந்தி கூறியது குறித்தும் வடிவேலு மீம்ஸ் மூலம் கம்மெண்ட் அடித்துள்ளார்.
என் சொந்தக் காரணங்களுக்காகவே காங்கிரஸில் இருந்து விலகினேன்!- காங்கிரஸ் முன்னாள் எம்பி நடிகை ரம்யா.
— மயக்குநன் (@LAKSHMANAN_KL) May 15, 2022
சொந்தக் காரணத்தினாலா...
'நொந்த'க் காரணத்தினாலா..?! pic.twitter.com/7FowjMPJFo
தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்கால் நினைவேந்தல் கருத்தரங்கத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பழ நெடுமாறன் ஆகியோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய புகைப்படத்தைப் பதிவிட்டு, “என்ன கபிலா ஜோக் காட்றியா?” என்று திவ்யா ஸ்ரீனிவாசன் மீம்ஸ் போட்டு கம்மெண்ட் அடித்துள்ளார்.
🐐🐐🐐 pic.twitter.com/nJPVPFrYae
— பாக்டீரியா (@Bacteria_Offl) May 14, 2022
இந்தி திணிப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை, இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று எங்கும் பாஜக கூறவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதற்கு பாக்டீரியா என்ற ட்விட்டர் பயனர், ‘அட ச்சை படுத்தே விட்டான்யா” என்று இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி மீம்ஸ் போட்டு பிராண்டியுள்ளார்.
இன்றைய பரிதாபங்கள்...
— Gokul (@Gokul_151980) May 15, 2022
பாஜக மற்றும் பழ.நெடுமாறன் 🤪 pic.twitter.com/VfG4RjQqG8
முள்ளிவாய்கால் நினைவேந்தல் கருத்தரங்கத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பழ நெடுமாறன் பங்கேற்றது குறித்து Gokul_Ammk என்ற ட்விட்டர் பயனர் “இன்றைய பரிதாபங்கள்… பாஜக மற்றும் பழ. நெடுமாறன்” என்று மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.
மாட்டுப் பிரியாணிக்கு தடை போட்டது பாஜக அல்ல திமுக. பசு மடம் அமைப்பது பாஜக அல்ல திமுக. அடுத்து பசு ஆம்புலன்ஸ் விடப்போவது திமுக..பேசுமா உன் வாய்? https://t.co/jRP4YfLjLo pic.twitter.com/nrRwXIM58l
— தமிழ்தேயன் (@Tamildeyam) May 15, 2022
தமிழ்தேயன் என்ற ட்விட்டர் பயனர், “மாட்டுப் பிரியாணிக்கு தடை போட்டது பாஜக அல்ல திமுக. பசு மடம் அமைப்பது பாஜக அல்ல திமுக. அடுத்து பசு ஆம்புலன்ஸ் விடப்போவது திமுக..பேசுமா உன் வாய்?” என்று திமுகவை மீம்ஸால் விமர்சித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.