மீம்ஸ் கிரியேட்டர்ஸை வாழ வைக்கும் ‘தெய்வம்’ நீங்கதான் தலைவரே..!

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நடுநிலையாளராக இருந்தாலும் சரி, நாகரிகமான மீம்ஸ்கள் மட்டுமே கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும்.

political memes, tamil memes, tamil political memes, arasiyal memes, viral memes, அரசியல் மீம்ஸ், தமிழ் அரசியல் மீம்ஸ்

அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுவது நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். அவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நடுநிலையாளராக இருந்தாலும் சரி, நாகரிகமான மீம்ஸ்கள் மட்டுமே கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும். சமூக ஊடகங்களில் இன்று (12.06.2022) கவனம் பெற்ற மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “திமுகவின் சாயம் வெளுத்து விட்டது” என்று கூறியதற்கு, “௭ப்புடி கடைசி வரை, ஸ்லீப்பர் செல் வெளியே வராம, சாயம் வெளுத்தது மாதிரியா..?” என்று கட்டனூர் சேக் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

மயக்குநன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அநீதி நடக்கும் போதெல்லாம் கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம் எடுப்பேன்!” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதற்கு, “இந்த விஷயம் முப்பாட்டன் முருகனுக்கு மட்டும் தெரியாம பாத்துக்கோங்க அண்ணே..!” என்று கிண்டல் செய்துள்ளார்.

மயக்குநன் மற்றொரு ட்வீட்டில், “மீம்ஸ் கிரியேட்டர்ஸை வாழ வைக்கும் ‘தெய்வம்’ நீங்கதான் தலைவரே..!” என்று சீமானை கலாய்த்துள்ளார்.

“அதிமுக இணைவதை திமுகவினர் விரும்பமாட்டார்கள்!” என்று சசிகலா கூறியதற்கு, “நீங்க அதிமுகவில் இணைவதை சில அதிமுகவினரே விரும்ப மாட்டேங்கிறாங்களே சின்னம்மா..!” என்று மயக்குநன் மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

மயக்குநன் மற்றொரு மீம்ஸில், “ஒவ்வொரு ஆண்டும் நெல்லின் விலையை உயர்த்தி விவசாயிகளின் பாதுகாவலராக பிரதமர் மோடி திகழ்கிறார்!” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, “ஒவ்வொரு மாசமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி… சைக்கிள் வியாபாரம் பண்ணுறவங்க பாதுகாவலராகவும் திகழுறாரு வாத்தியாரே..!” என்று கிண்டல் செய்துள்ளார்.

தர்மஅடி தர்மலிங்கம் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அதிமுக எவ்வாறு செயல்படுகிறது என்பது ஊடகத்திற்கும் நாட்டு மக்களுக்கு தெரியும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு, “சட்டமன்றத்தில் அடிக்கடி கோபிச்சிக்கிட்டு வெளிநடப்பு செஞ்சதை சொல்றாரு போல..” மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.

தர்மஅடி தர்மலிங்கம் மற்றொரு மீம்ஸில், “அதிமுக – பாஜக இடையே பெரிய அளவில் விரிசல் இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, “அப்போ.. ‘சிறிய அளவில் புகைச்சல்’ மட்டும் தான் இருக்குங்களோ..??” என்று நக்கல் செய்துள்ளார்.

சரவணன்.M என்ற ட்விட்டர் பயனர், “சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது அதிமுகதான்!” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளார் ஓபிஎஸ் கூறியதற்கு, “அது சரி.. ஆளுங்கட்சி யாரு..!? பாஜக..” என்று கிண்டல் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Political memes ops seeman annamalai bjp aiadmk ntk

Exit mobile version