அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுபவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். நாகரிகமான மொழியில் நகைச்சுவையாக அரசியல் சரித் தன்மையுடன் பகிரப்படும் எந்த அரசியல் மீம்ஸும் கட்சி பேதம் தாண்டி கவனம் பெற்று பாராட்டப்படும்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் நடந்து வரும் நிலையில், ஒற்றைத் தலைமை பிரச்னை குறித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் அதிக அளவில் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.
இன்று சமூக ஊடகங்களில் கவனம் பெற்ற அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
2016-இல் ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த மாஃபா பாண்டியராஜன், தற்போது இ.பி.எஸ் ஆதரவாளராக மாறிருப்பது குறித்து ஜோ என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “மாஃபா பாண்டியராஜன் ~ ஒரே கட்சிக்குள்ளயே எவனாச்சும் கட்சிதாவல் பண்ண முடியுமா சார்??! இந்த மாஃபா பண்ணுவான் சார்..” என்று மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
ஜோ மற்றொரு மீம்ஸில், இ.பி.எஸ் காலில் விழும் ஆதரவாளர்கள் குறித்து, “EPS ~ நானே அந்தம்மா கால்ல விழுந்துதான் ஆட்சிக்கு வந்து, அப்புறம் அவங்க கால வாறுனேன்.. இவன் என்னடான்னா என் கால்லயே விழுந்து என்னையவே வாறி விட பாக்குறான் சாமி..” என்று கிண்டல் செய்துள்ளார்.
இ.பி.எஸ் எம்.ஜி.ஆர்
நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “பொய் சொல்லாமல் இருந்தால் தான் யோகா பிரயோசன படுமாம் .# பக்கத்து வீட்டுக்காரர் கருத்து” என்று யோகாவை புரமோட் செய்யும் பாஜகவினரை கிண்டல் செய்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி மற்றொரு மீம்ஸில், “5 கிலோ தங்கம்…. 120 கோடி பணம்… பால் தினகரனுக்கு சம்மன் # என்னடா…இது போதகருக்கு வந்த சோதனை…!!!” என்று கிண்டல் செய்துள்ளார்.
அதிமுகவில் ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவராக இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மாறி வரும் நிலையில், சாணக்கியன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “OPS NOW…யாராச்சும் என் கூட இருக்கீங்களா…எனக்கு பயமா இருக்கு.. சொல்லுங்கப்பா..” என்று மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.
சாணக்கியன் மற்றொரு மீம்ஸில் வடிவேலுவின் கைப்புள்ள மீம்ஸ் போட்டு, ஓ.பி.எஸ் பரிதாபங்கள் என்று கிண்டல் செய்துள்ளார்.
இ.பி.எஸ் பக்கம் ஆதரவாளர்கள் சேர்ந்துகொண்டிருக்கும் நிலையில், மோஹன்ராம்.கோ என்ற ட்விட்டர் பயனர், “உங்க பக்கம் ஆளா சேர்த்துக்கிட்டு இருக்கீங்க… இருங்கடா.. ஒற்றைத் தலைமை மோடி தான்னு பேட்டி கொடுத்து ஆட்டத்தையே கலைச்சி விட்டுடறேன்” என்று கிண்டல் செய்துள்ளார்.
மோஹன்ராம்.கோ மற்றொரு மீம்ஸில், “இந்த உலகத்திலேயே கார்லயே கேமராமேனை வச்சிக்கிட்டு சுத்தற ஒரே கரகாட்ட கோஷ்டி, நம்ம கோஷ்டி தான்” என்று பிரதமரை கிண்டல் செய்துள்ளார்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “சென்னை, மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சற்று நேரத்தில் ஓபிஎஸ் செல்ல உள்ளதாக தகவல்” என்ற செய்தி குறித்து, “# நான் சொல்லல..? வருவான்..” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
ஓ.பி.எஸ் இன்று காலை, “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால், மறுபடியும் தருமம் வெல்லும் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்” என்று ட்வீட் செய்திருந்ததை ஜேம்ஸ் ஸ்டேன்லி என்ற ட்விட்டர் பயனர், “நெறய சூது கவ்விருக்கும் போலயே..” என்று கிண்டல் செய்துள்ளார்.
வசந்த் என்ற ட்விட்டர் பயனர், “நாளைக்கு பதவி இழந்து வீட்டுக்கு போகப்போவது யார்… எடப்பாடியா, பன்னீரா.. இணைந்திருங்கள் மக்களே” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“