அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் சுடச்சுட எதிர்வினையாற்றுபவர்கள் நம்ம மீம் கிரியேட்டர்கள்தான். ஒரு கட்டுரை, ஒரு புகைப்படம், ஒரு வீடியோ அளவுக்கு ஒரு மீம்ஸ் மூலம் அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு கவுன்ட்டர் கொடுத்துவிடுவார்கள்.
நாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வருகிற போதெல்லாம், #GoBackModi என்று ட்ரெண்ட் செய்வது அரசியல் நாகரிகமாக தெரியவில்லை. தமிழர்களின் விருந்தோம்பல் உலகம் அறிந்தது. எதிரியாக இருந்தாலும் வரவேற்பதுதானே நாகரிகம். ஆனால், சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி வரும்போதெல்லாம் இப்படி ட்ரெண்ட் செய்வது நடந்து வருகிறது. இதையொட்டி மீம்ஸ்களும் இன்று நிறைய பதிவிடப்பட்டுள்ளது.
இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கு மீம்ஸ் கிரியேட்டர்களின் ரியாஷன்களை இங்கே காணலாம்.
நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், பிரதமர் மோடி, தமிழகத்தில் ரூபாய் 31,500 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடங்கி வைப்பது குறித்து, “ரூபாய் 31,500 கோடி திட்டங்கள் # “செங்கலுக்கு ” வேலை வந்தாச்சி..!!!” என்று கிண்டல் செய்துள்ளார்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச? என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “#GoBackModi ன்னு நம்ம பேர் ஏதோ ட்விட்டர்ல டிரெண்ட் ஆகுதாம்.. நாட்ல நம்ம நல்லா பேமஸ் ஆகுறோம் போல..” என்று கிண்டல் செய்துள்ளார்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச? என்ற ட்விட்டர் பயனர் மற்றொரு மீம்ஸில், “#GoBack_Modi ன்னு எல்லாம் கஷ்டப்பட்டு சொல்ல தேவையே இல்லை.. ஏர்போர்ட்ல வாசல்ல நிறைய பேரு கையில மைக் வைச்சுட்டு வெயிட் பண்ணிட்டு இருக்காங்கன்னு சொன்னா போதும்..” என்று மீம்ஸ் போட்டுள்ளார்.
மற்றொரு மீம்ஸில், “கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? நீங்க டெய்லி வருவீங்களா ? நாங்க #GoBackModi டிரெண்ட் பண்ணி விளையாடனும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
சரவணன். M என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “கொள்ளையடிப்பது ஒன்றே குடும்பக் கட்சிகளின் இலக்கு! – பிரதமர் மோடி அமித்ஷா மகன் ஜெய்ஷா அதிர்ச்சி..” மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
Msd இதயவன் என்ற ட்விட்டர் பயனர், “பாஜகவின் பி டீம் தான் நாம் தமிழர் கட்சி என்று ஜோதி மணி கூறியதற்கு, வளைச்சு வளைச்சு தோற்கிறதை பார்த்தா காங்கிரஸ் தான் பாஜகவின் பி டீம் மாதிரி தெரியுது?!” என்று மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
கோ பேக் மோடி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவது குறித்து, பாக்டீரியா என்ற ட்விட்டர் பயனர், “ஆண்டாளு சாப்டியா… என்ன கொழம்பு” என்று சிறுவர்கள் தவளைக்குள் பேசிக்கொள்கிற மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
நல்ல பாம்பு என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “எத்தனை குறளிவித்தைக் காட்டினாலும் இதான் நடக்கும்” என்று கூறியுள்ளார்.
D.Srichitharthan என்ற ட்விட்டர் பயனர், “4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தேன்! அதுவும் இரட்டை இலை சின்னத்தில் என்று ஜோதிமணி கூறியதாக” மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
இத்தனை அரசியல் மீம்ஸ்களுக்கு இடையே, கணவன் மனைவி சண்டையை வைத்து, மாணிக்க மைந்தன் என்ற பயனர், புரிஞ்சுக்கோங்க என்று குறிப்பிட்டு, வடிவேல் படத்தை மீம்ஸாகப் போட்டு, “மனைவியிடம் மனம்விட்டு பேசினால், சண்டை வராதாம்… அடேய் சண்டை வந்ததே மனம்விட்டு பேசுனதால தான்…” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“