/tamil-ie/media/media_files/uploads/2022/05/political-memes-2.jpg)
ஊடகங்களைவிட சமூக ஊடகங்கள் இன்று செய்தியைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால்தான், அனைத்து கட்சிகளும் ஐடி விங் என்று சமூக ஊடகப் பிரிவை வைத்திருக்கின்றன. அது ஆளும் கட்சி தரப்பாக இருந்தாலும் எதிர்கட்சி தரப்பாக இருந்தாலும் நடுநிலையாளராக இருந்தாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கிறார்கள்.
அந்த வகையில், இன்றைய மீம்ச்களை தொகுத்து இங்கே தருகிறோம்.
ஞானவாபியில் மசூதியில் லிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகி விவகாரம் ஆன நிலையில், கட்டனூர் சேக் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், நீண்ட உருளை வடிவ டேங்க் வாகனத்தின் படத்தைக் க் குறிப்பிட்டு, “சங்கீ - பாஸ் நம்ம லிங்கத்த யாரோ கடத்திட்டுப் போறாங்க பாஸ்” என்று கிண்டல் செய்துள்ளார்.
ஜி: இந்தியா மேல தான் அணுகுண்டு போடவே இல்லையே,, அப்புறம் எப்படி முன்னேற முடியும் ? https://t.co/TzZAs7crrS pic.twitter.com/Id8ETuUrF8
— கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2) May 24, 2022
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “ஜி: இந்தியா மேலதான் அணுகுண்டு போடவே இல்லையே… அப்புறம் எப்படி முன்னேற முடியும்?” என்று கேட்டு பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார்.
ராஜா.க என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், 100% உண்மை என்று குறிப்பிட்டு, “வாழ்க்கையில எப்போதும் தனியா இருக்கனும்னு ஆசைப்படாத… ஒரு தடவை அந்த போதைய அனுபவிட்டினா உன்னால அதுல இருந்து மீளவே முடியாது.” என்று மீம்ஸ் மூலம் தத்துவமும் சொல்லியிருக்கிறார்.
பாமக தலைவர் ஜி.கே. மணி, பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணியை இந்திய திருநாட்டையே ஆளும் திறமை கொண்டவர் என்று கூற அதற்கு நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர் கொஞ்சம் இரு சிரிச்சிக்கிறேன் என்று மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.
ஜெகதீஷ்.கோ என்ற ட்விட்டர் பயனர், உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஆணவக் கொலை என்ற செய்திகு, பாஜகவினர் சொல்வதாக, பதவி விலகுவாரா ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று கூறுவதாக மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
தருமபுரம் ஆதீனம் பெரிய வாழை இலையில் சாப்பிட்ட போட்டோ சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ஜெகதீஷ்.கோ தனது மற்றொரு மீம்ஸில் “இலை படுகாவா இல்ல சாப்டவா?” என்று கவுண்டமணி மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
மண்டகஷாயம் சங்கி, என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், மேட்டூர் அணையை திறந்த ஸ்டாலின் பூ தூவும்போது, தட்டைத் தூக்கி வீசியது குறித்து மீம்ஸ் போட்டுள்ளார். அதில், “ஹலோ துரைமுருகன் சார்ரா? பூக்கடைக்காரர் பேசுறேன்… தட்டை எப்பசார் கொண்டு வருவீங்க?” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
குருநாதா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “இன்று ஓவியர் தினமாம்… மாமனாருக்கு ஃபோன் பண்ணி வாழ்த்து சொல்லிட்டேன்” என்று ஒரு கவிதை மாதிரியான மீம்ஸ் போட்டுள்ளார்.
மயக்குநன் என்ற ட்விட்டர் பயனர், “அவர் பிரதமராவதை எதுதான் தடுக்குது? என்று கேட்டு மக்களோட ஓட்டுதான் என்று தனது மீம்ஸ் மூலம் பலரையும் இடித்துள்ளார்.
— மீம்ஸ் பாலா (@gbalamurugan46) May 23, 2022
2026-இல் பாமக ஆட்சி என்று அன்புமணி ராமதாஸ் கூறியதற்கு, மீம்ஸ் பாலா என்ற ட்விட்டர் பயனர், “சிரிக்கிற நேரம் வந்தாச்சு… இது போன்ற நகைச்சுவையான செய்திகளை 24 மணி நேரமும் கண்டு மகிழுங்கள்” என்று மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மேட் இல்லாமல் பயனம் செல்பவர்களை மடக்கிப் பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இது குறித்து சென்னை காவல்துறை, ஹெல்மெட் அபராதம் என்பது மக்களைப் பாதுகாக எடுக்கப்படும் முடிவு என்று கூறியுள்ளது. அதற்கு மிம்ஸ் பாலா என்ற மீம்ஸ் கிரியேட்டர், “அப்ப டாஸ்மாக்?” என்று கேட்டு கிண்டல் செய்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.