scorecardresearch

பாஜக உள்ளே பூந்துடும் பாய்… அதனால் தான் வீட்டுக்குள்ளே அடக்குறோம்

சமூக ஊடகங்களில் இன்று மீம்ஸ் கிரியேட்டர்கள் சாட்டையைச் சுழற்றியதில் பறந்த சில மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

பாஜக உள்ளே பூந்துடும் பாய்… அதனால் தான் வீட்டுக்குள்ளே அடக்குறோம்

உள்ளுர் முதல் உலக அரசியல் வரை அனைத்து அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றி தெறிக்கவிடுபவர்கள்மீம்ஸ் கிரியேட்டர்கள். மீம்ஸ் கிரியேட்டர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாகரிகமான கிண்டலுடன் மீம்ஸ் போட்டால் அது கட்சிபேதம் தாண்டி கவனிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் இன்று மீம்ஸ் கிரியேட்டர்கள் சாட்டையைச் சுழற்றியதில் பறந்த சில மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், கொஞ்சம் கொஞ்சமாக வடமாநிலமாக மாறும் தமிழகம்… ரிசர்வேஷன் கோச்களில் வித் அவுட் வட மாநிலத்தவர் அட்டூழியம் செய்வதாக சந்திரமுகி ஜோதிகா மீம்ஸ் போட்டு எச்சரிக்கை செய்துள்ளார்.

மற்றொரு மீம்ஸில் நெல்லை அண்ணாச்சி, பாஜக தலைவர் அண்ணாமலை 72 மணி நேர கெடு விதித்ததைக் குறிப்பிட்டு, “72 மணி நேர கெடு… 3 மாதமாக நீட்டிப்பு” என்று கிண்டல் செய்துள்ளார்.

போர நடக்கும்போது பிரபாகரன் தினமும் என்னுடன் போனில் பேசுவார் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதைக் கிண்டல் செய்து அதில் கான் ஐஎன்சி என்ற ட்விட்டர் பயனர், உன்னை நினைத்து படத்தில் சுந்தரராஜன் போனில் பேசும் மீம்ஸ் போட்டு, “ஆமா நான் பிரபாகரன்தான் பேசுறேன்… எனக்கு போரவிட தினமும் உங்ககிட்ட பேசுறதுதான் முக்கியம்” என்று கலாய்த்துள்ளார்.

பாஜக பிரமுகர் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து இசை என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், சார்பட்டா படத்தின் மீம்ஸ் போட்டு, “ரெவிடிங்களா தேடித்தேடி கட்சியில சேத்துட்டு இப்ப ரெவிடிங்க உயிருக்கு பாதுகாப்பில்லனு மூக்க சிந்துறியே… என்ன அண்ணாமலை” என்று பாஜக தலைவர் அண்ணாமலையை டேக் செய்து மீம்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

காரல் என்ற ட்விட்டர் பயனர், பிரதமர் மோடி தமிழகம் வருவது குறித்து, “நாங்களாவது உங்ககிட்ட சொல்லிட்டு வந்தோம்… நீங்க எங்ககிட்ட சொல்லிட்டா வந்தீங்க?” என்று மீம்ஸ் போட்டுள்ளார்.

மீம்ஸ்களுக்கு கச்சாக்களையும் ஆதாரமாகவும் இருக்கும் கோபக்கார நகைச்சுவை மன்னன் கவுண்டமணிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பலரும் அவருக்கே மீம்ஸ் போட்டுள்ளனர்.

ஹம்ப்டி என்ற ட்விட்டர் பயனர், “நமக்கு பிடிச்சவங்க Hi ன்னு மெசேஜ் பண்றப்ப வர சந்தோஷத்த விட.. Oii ன்னு மெசேஜ் பண்ணும் போது வர்ற சந்தோஷத்துக்கு அளவே இல்லை!! கொளுத்தி போடுவோம்” என்று ஒரு ஜாலி மீம்ஸ் போட்டு கிளப்பிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று மேட்டூர் அணையில் நீர் திறக்கும்போது, பூ தட்டை தூக்கி வீசியதைக் கிண்டல் செய்து கணியம்பூண்டி செந்தில் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “நீங்க நகர்ப்புற விஞ்ஞானிகளய்யா… டெட்லி கோம்போ” என்று செல்லூர் ராஜு மற்றும் மு.க. ஸ்டாலின் படங்களைப் போட்டு கலாய்த்துள்ளார்.

ஏடிஎம்கே ஹரி கிருஷ்ணன் என்ற ட்விட்டர் பயனர், “நாளை சென்னை வரும் பிரதமர் மோடியைத் தமது இல்லத்திற்கு வருமாறு விடியல் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த அழைப்பு பிரதமர் அலுவலக பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்…

// பாஜக உள்ளே பூந்துடும் பாய். அதனால் தான் வீட்டுக்குள்ளே அடக்குறோம் // ஹஹஹாஹாஹா” திமுகவை கிண்டல் செய்துள்ளார்.

ஸ்னேக் பாபு என்ற ட்விட்டர் பயனர், “எடப்பாடி ஆட்சியில் கருப்பர் கூட்டத்திற்கு நடந்ததை சங்கிகள் மீண்டும் நடத்த பார்க்கின்றனர். இதை திமுக செய்தால் இதைவிட வெட்கக் கேடு ஒன்றுமில்லை.” என்று நடராஜர் சிலை பற்றி தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் குறித்து எச்சரித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Political memes pm modi visits to chennai dmk mk stalin bjp