Advertisment

மேன் நீ வேற லெவல் அரசியல் பண்றய்யா!

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எல்லா கட்சிகளின் சார்பிலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் நிகழ்வுகளுக்கு தங்கள் மீம்ஸ் மூலம் சாட்டையைச் சுழற்றி பதிலளிக்கிறார்கள். நாகரிகமான மீம்ஸ்கள் மட்டுமே கட்சிபேதம் தாண்டி கவனத்தைப் பெறும்.

author-image
WebDesk
New Update
Political memes, tamilnadu politics, latest tamil memes, trending tamil memes, Annamalai, BJP, DMK, Congress, அரசியல் மீம்ஸ், மேன் நீ வேற லெவல் அரசியல் பண்றய்யா அண்ணாமலை, பாஜக, Political memes today, tamilnadu political memes, Annamalai K

Tamil Political Memes: அச்சு ஊடகங்களில் அன்றாட அரசியல் நிகழ்வுகளை, அரசியல்வாதிகளை விமர்சிப்பதில் கார்ட்டூன்கள் ஒரு முக்கிய பகுதியாக இருந்தன. சமூக ஊடகங்கள் கோலோச்சும் காலத்தில், அரசியல் நிகழ்வுகளை, அரசியல்வாதிகளின் கருத்துகளை விமர்சிக்க் மீம்ஸ்கள் பெரிய அளவில் இடம்பெறுகின்றன. கார்ட்டூன் வரைவதற்கு ஓவியம் வரைய தெரிந்திருக்க வேண்டும். ஆனால், மீம்ஸ் கிரியேட்டராக இருப்பதற்கு, நல்ல நகைச்சுவை உணர்வு, நகைச்சுவை படங்களைப் பார்க்கிற வழக்கமும் அரசியலும் தெரிந்திருந்தால் போதும் எளிதாக மீம்ஸ் கிரியேட்டர்கள் ஆகிவிடலாம்.

Advertisment

சமூக ஊடகங்களில் இன்றைக்கு, அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உடனுக்குடன் சுடச்சுட எதிர்வினையாற்றுபவர்கள் என்றால் அது மீம்ஸ் கிரியேட்டர்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எல்லா கட்சிகளின் சார்பிலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் நிகழ்வுகளுக்கு தங்கள் மீம்ஸ் மூலம் சாட்டையைச் சுழற்றி பதிலளிக்கிறார்கள். நாகரிகமான மீம்ஸ்கள் மட்டுமே கட்சிபேதம் தாண்டி கவனத்தைப் பெறும்.

இன்றைய அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

தொடர்ந்து மீம்ஸ்களை வெளியிட்டு வரும் மயக்குநன் என்ற ட்விட்டர் பயனர், “ஒரு கட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு தலைவரை கட்சித் தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்ற சசிகலாவின் கருத்துக்கு, “கூவத்தூர் ரிசார்ட்ல வச்சுங்களா சின்னம்மா..?!” என்று கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

amudu என்ற ட்விட்டர் பயனர், “ஒரே முறையில் மட்டுமே எழுதி பாஸ் பண்ண முடியாமல், அடுத்த அடுத்த தேர்வென நீட்டித்துக் கொண்டே செல்வதால் தான் இதற்கு "நீட்" தேர்வு என்று பெயர்.” நீட் தேர்வு குறித்து இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி வடிவேல் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்துள்ளார்.

இந்தியாவில் ரூ.2,000 நோட்டின் புழக்கம் குறைந்துவிட்டதாக செய்தி வெளியானது குறித்து, amudu என்ற ட்விட்டர் பயனர், தனது மற்றொரு மீம்ஸில், “அதில் "சிப்" இருப்பதால் , அதிகமாக புழங்க மக்கள் பயப்படுறாங்களோ.” என்று கிண்டல் செய்துள்ளார். முதலில் ரூ.2,000 நோட்டு வெளியானபோது அதில் சிப் இருப்பதாக வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உதயநிதி அளவுக்கு நான் நல்ல நடிகர் அல்ல” என்று கூறியதற்கு, தர்மஅடி தர்மலிங்கம் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “ஆமாமா… உங்களுக்கு முழங்கால் தண்ணியில போட் விடுற அளவுக்கு தானே நடிப்பு வரும்.” என்று கவுன்ட்டர் கொடுத்து கலாய்த்துள்ளார்.

சரவணன். M என்ற ட்விட்டர் பயனர், “சாவர்க்கர் பற்றி அதிகம் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்” என்று அண்ணாமலை கூறியதற்கு, சாவர்க்கர் சொல்வதாக, “எதுக்கு நான் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி அசிங்கப்பட்டதை எல்லோரும் தெரிஞ்சுக்கறதுக்கா?” என்று கவுண்ட்டர் கொடுத்துள்ளார்.

வசந்த் என்ற ட்விட்டர் பயனர், “360 டிகிரி, இருபதாயிரம் புத்தகங்கள், கரண்டைக்கால் தண்ணீரில் படகு சவாரி…… மேன் நீ வேற லெவல் அரசியல் பண்றய்யா.” என்று பாஜக தலைவர் அண்ணாமலையின் அரசியல் பேச்சுகளை பங்கமாக கலாய்த்துள்ளார்.

“பிரதமர் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு இருக்கக்கூடாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதற்கு, தர்மஅடி தர்மலிங்கம் மற்றொரு மீம்ஸில், “விட்டா… பிரதமர் விழாவில் பிரதமரையே கலந்துக்க கூடாதுன்னு சொல்லுவார் போல.!” கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

மெர்சல் சிவா என்ற ட்விட்டர் பயனர், “பேச்சு யார் வேணா பேசலாம் பேச்சை விட செயல் தான் முக்கியம்.
: சார் எங்க செயல்பட்டுட்டு இருக்கீங்க. ட்விட்டர்ல தான்..” என்று எதுவும் செய்யாமல் ட்விட்டரில் மட்டும் பதிவு போடுபவர்களை பத்திவிட்டிருக்கிறார்.

துயிலன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அன்புமணியை கோட்டையில் அமரவைக்க கடுமையாக உழைப்போம்” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதற்கு, “தன் சாதிக்காரன் மட்டும் உழைத்தால் அன்புமணியை கோட்டையில் அமர வைக்க முடியாது என்பதை இவருக்கு எப்படி புரிய வைப்பேன்.” என்று கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

மயக்குநன் தனது மற்றொரு மீம்ஸில், “இந்திய திருநாட்டையே ஆளும் திறமை கொண்டவர் அன்புமணி” என்று ஜி.கே.மணி கூறியதற்கு, “சின்னய்யாவுக்கு முதல்வர் கனவில் இருந்து பிரதமர் கனவுக்கு புரொமோஷன் கிடைச்சிருச்சு போலிருக்கே..?” மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.

“மோடிஜி மீது அன்பும் பாசமும் தமிழ்நாட்டில் பெருகி வருகிறது…” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு, சிரித்து வைத்து மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Memes Trending Tamil Memes Today Latest Tamil Memes Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment