Advertisment

பூட்டுன வீட்டுக்கு முன்னாலதான் இவ்ளோ நேரம் சவுண்ட் குடுத்துகிட்டு இருந்தமா?

அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினை ஆற்றுபவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். அரசியல் கிண்டல், அரசியல் கேலி மீம்ஸ் எல்லாமே நாகரிகமாக இருந்தால் மட்டுமே கட்சி பேதம் தாண்டி கவனிக்கப்படும்.

author-image
WebDesk
New Update
பூட்டுன வீட்டுக்கு முன்னாலதான் இவ்ளோ நேரம் சவுண்ட் குடுத்துகிட்டு இருந்தமா?

அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினை ஆற்றுபவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். அரசியல் கிண்டல், அரசியல் கேலி மீம்ஸ் எல்லாமே நாகரிகமாக இருந்தால் மட்டுமே கட்சி பேதம் தாண்டி கவனிக்கப்படும்.

Advertisment

அந்த வகையில், சமூக ஊடகங்களில் இன்று கவனம் பெற்ற மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

“20 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், 60 மாவட்டங்களில் போராட்டம்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, மோஹன்ராம்.கோ என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “நீங்க ரொம்ப முன்னாடி போயிட்டீங்க, எவ்வளவு முன்னாடி? 60 மாவட்டம்னா கேரளா, கர்நாடகாவையும் தாண்டி..” என்று கிண்டல் செய்துள்ளார்.

“அதிமுகவின் இடத்தை பாஜக நிரப்புகிறது: தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல” என்று பொன்னையன் கூறியதற்கு, கட்டனூர் சேக் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “இத உங்க தலைமையை சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்..” என்று கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

சென்னைக்கு பிரதமர் மோடி வந்திருந்தபோது, அவர் முன்பாகவே, முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க இதுதான் சரியான தருணம் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, “கச்சத்தீவை ௭ப்படி மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மட்டுமே தெரியும்” பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதற்கு கட்டனூர் சேக், “அதிரடி அரசியல் ௭ங்களுக்கும் தெரியும், ஆனால் காட்ட மாட்டோம், காட்டத் தெரியாது ௭ங்களுக்கு.. மூமெண்ட்” என்று கலாய்த்துள்ளார்.

மத்திய அரசு தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி தொகை விடுத்தது குறித்து சந்தோஷ் நாராயணன் என்ற ட்விட்டர் பயனர், செந்தில் கவுண்டமணி மீம்ஸ் வீடியோ போட்டு கிண்டல் செய்துள்ளார்.

கட்டனூர் சேக் மற்றொரு மீம்ஸில், பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் உள்ள 60 மாவட்டங்களிலும் போராட்டம் பண்ணுவோம்” என்று கூறியதற்கு, “ஐபிஎஸ் படிச்ச இவருக்குள்ள யாரோ ஒருத்தர் தமிழ்நாட்ல 60 மாவட்டம் இருக்கு னு சொல்லி நம்ப வச்சுருக்காங்க..” என்று கிண்டல் செய்துள்ளார்.

தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பேரணியை கிண்டல் செய்து கட்டனூர் சேக், மரண பங்கம் என்று குறிப்பிட்டு, சுப்பிரமணியபுரம் படத்தின் மீம்ஸ் போட்டிருக்கிறார். அதில், “பூட்டுன வீட்டுக்கு முன்னாலதான் இவ்ளோ நேரம் சவுண்ட் குடுத்துகிட்டு இருந்தமா?” என்று கலாய்த்துள்ளார்.

கட்டனூர் சேக் இன்று பெட்ரோல் டீசல் விலை தொடர்பாக பாஜகவையும் அண்ணாமலையையும் விமர்சித்து மீம்ஸ் கணைகளை தொடுத்துள்ளார்.

அதே போல, “தமிழகத்திற்கு ரூ 9062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்தது நிதியமைச்சகம்” என்ற செய்தி குறித்து, “அடி உதவுற மாதிரி.. அண்ணன், தம்பி கூட உதவமாட்டாங்கன்னு.. சும்மாவா சொன்னாங்க.. பெரியவங்க..” என்று கட்டனூர் சேக் மீம்ஸ் கம்மெண்ட் அடித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல.” என்று பொன்னையன் கூறியதற்கு கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச என்ற ட்விட்டர் பயனர், “அதனால கட்சியை விட்டு விலக போறீங்களா..? அது அநாவசியம்.. அதிமுகவை பாஜகவோட இணைச்சுட்டா ரெண்டும் சேர்ந்து வளரலாம்னு சொல்ல வந்தேன்..” என்று கிண்டல் செய்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Memes Trending Tamil Memes Today Latest Tamil Memes Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment