கார்ட்டூன்களும் மீம்ஸ்களும் அரசியல் விமர்சனங்களை தீவிரமாக இல்லாமல், கிண்டலாகவும் ஆனால், கூர்மையாகவும் அணுகுகின்றன. மீம்ஸ்கள் அன்றாட அரசியலை உடனுக்குடன் சுடச்சுட விமர்சிக்கின்றன. மீம்ஸ் கிரியேட்டர்கள் பிரதமர் முதல் கவுன்சிலர் வரை யாராக இருந்தாலும் தங்கள் மீம்ஸ் மூலம் விமர்சிக்கத் தயங்குவதில்லை. ஆனாலும், நாகரிகமான அரசியல் மீம்ஸ்கள் மட்டுமே கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும்.
நமது மீம்ஸ் கிரியேட்டர்கள் அரசியல் நிகழ்வுகளுக்கு வேகமாக சாட்டையை சுழற்றி இருக்கிறார்கள். அரசியல் தலைவர்களின் கருத்துகளுக்கு கவுன்ட்டர் கொடுத்து கலாய்த்திருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் இன்று கவனத்தைப் பெற்ற மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
மயக்குநன் என்ற ட்விட்டர் பயனர் இன்று மீம்ஸ்களை மழைபோல் பொய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள இன்றைய அரசியல் மீம்ஸ்களை ஒன்றைக்கூட விட்டுவிடும்படியாக இல்லை. அதனால், அவருடைய அனைத்து மீம்ஸ்களையும் பாருங்கள்.
“ஓர் அரசு மக்களுக்கு நல்லது செய்தாலும் சரி, மக்களுக்கு எதிராகச் செயல்பட்டாலும் சரி, அதை வெளியில் கொண்டுவருவது பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும்தான்!” என்று சசிகலா கூறியதற்கு, “சொத்துக்குவிப்பு வழக்கை வெளியே கொண்டு வந்ததைச் சொல்றாங்களோ..?!” பத்திரிகையாளர்களின் மைண்ட் வாய்ஸாக வடிவேல் மீம்ஸ் போட்டு கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தவிட்ட செய்தி குறித்து, “அப்பாடா… இனி நிம்மதியா நெட்ஃபிளிக்ஸ்ல படம் பார்க்கலாம்..!” என்று மயக்குநன் கலாய்த்துள்ளார்.
“இலங்கை இப்போது கடினமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது” என்று பிரதமர் மோடி கூறியதற்கு, “கடந்த எட்டு வருஷமாவே நாங்க கடந்துக்கிட்டுதான் இருக்கோம் ஜீ..!” என்று மயக்குநன் மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
“பிரதமர் பங்கேற்ற வளர்ச்சித் திட்ட விழாவை திமுக 'பேரணி' ஆக்கிவிட்டார் முதல்வர்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதற்கு, “பாஜகவுடனான 'போரணி'யாகவும் ஆக்கிட்டார்னு சொல்லுங்க..!” என்று மயக்குநன் மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
“ஏழைகளின் நலனுக்காகவே பணியாற்றுகிறோம்” என்று பிரதமர் மோடி கூறியதற்கு,
“அந்த ஏழைகளின் பெயர் 'அ'-வில் தொடங்கும்… அப்படித்தானே ஜீ..?!” என்று அம்பானி, அதானி பெயர்களின் முதல் எழுத்துகளைக் குறிப்பிடும் விதமாக மயக்குநன் மீம்ஸ் போட்டுள்ளார்.
“இந்த உலகமே இந்தியாவின் பேச்சைக் கேட்கிறது” என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதற்கு, “சத்தம் போட்டுச் சொல்லாதீங்க… சீனாவுக்கு கேட்டுடப் போகுது..!” என்று மயக்குநன் கலாய்த்துள்ளார்.
“இன்னும் 4 ஆண்டு திமுக ஆட்சி எப்படி இருக்குமோ என நினைத்தால் பயமாக இருக்கிறது” என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதற்கு, “பயப்படாதீங்க… 8 ஆண்டு பாஜக ஆட்சியையே சமாளிச்சிட்டோமே..?!” என்று மயக்குநன் மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, பாஜக தலைவர் அண்ணாமலை என்று கூறுவதற்கு பதில், பார் ஜனதா தலைவர் ஏழுமலை என்று தவறுதலாகக் கூற அருகில் இருந்த கே.பி. முனுசாமி அண்ணாமலை என்று எடுத்துகொடுத்த பிறகு, ஆங், அண்ணாமலை என்று கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலான நிலையில், பாக்டீரியா என்ற ட்விட்டர் பயனர், “பார் - ஏழுமலை” என்று குறிப்பிட்டு, வக்கில் கோட்டில் இருக்கும் வடிவேலு உடலுடன் இ.பி.எஸ் முகத்தை இணைத்து, “என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது” என்று கிண்டல் செய்துள்ளார்.
“குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாற வாய்ப்பில்லை” என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த நிலையில், “இப்பதான்யா நல்ல வார்த்தை பேசறான்” என்று கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? என்ற ட்விட்டர் பயனர் கிண்டல் செய்துள்ளார்.
பாஜகவின் 8 ஆண்டு ஆட்சியை விமர்சித்து மோகன்ராம்.கோ என்ற ட்விட்டர் பயனர், “8 வருஷம் முன்னாடி தானே போய்க்கிட்டு இருக்கு… எனக்கென்னவோ 50 வருஷம் பின்னாடி போன மாதிரியே இருக்கு…” என்று வடிவேல் குரலில் கிண்டல் செய்துள்ளார்.
பொதுவாக திமுக ஆதரவு மீம்ஸ்களை பதிவிட்டு வந்த நெல்லைஅண்ணாச்சி என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “எனக்கு அமைச்சர் பொறுப்பு கேட்டு தலைமைக்கு தர்மசங்கடத்தை உண்டாக்க வேண்டாம்.” என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு, “இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு” விமல் - சந்தானம் மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி தனது மற்றொரு மீம்ஸில்,“பாஜக… அதிமுக கூட்டணியால் மக்களுக்கு
என்ன லாபம்…? # அதிமுக " காணாமல் " போனது தான்…!!!” என்று கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
அண்மையில் தமிழக சட்டப் பேரவையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜு, மதுரை மக்கல் பொழுதுபோக்குவதற்கு, இடம் இல்லை. போழுதுபோக்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜுதான்” என்று கூறி நகைச்ச்சுவையாகப் பேசினார்.
இந்த மீம்ஸ்களுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல, மயக்குநன் ஒரு மீம்ஸ் போட்டுள்ளார். “தமிழ்நாட்டின் பொழுதுபோக்கு திமுகவும், முதல்வரும்தான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதற்கு, “ஆகா… என்ன ஒரு தன்னடக்கம்..?!” என்று கலாய்த்துள்ளார்.
கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர், “தமிழ்நாட்டின் பொழுதுபோக்கு திமுகவும், முதல்வரும் தான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதற்கு, “அப்போ நீங்க இல்லைன்னா மதுரைக்கி பொழுதுபோக்கு இல்லைன்னு சொல்லுங்க…” என்று மீம்ஸ் மூலம் செல்லுர் ராஜுவை கிண்டல் செய்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.