Pollachi news in tamil: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை ஒட்டி உள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரப் பகுதியில் உள்ளது, இப்பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் பயிர்டப்பட்டுள்ளதுபகல் மற்றும் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைக் கூட்டங்கள் தென்னை மரங்களை சாய்த்து குருத்துகள் மட்டும் சாப்பிட்டு செல்வது வழக்கமாக உள்ளது.
இதையடுத்து ஆழியார் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை தென்னை மரத்தை சாய்க்க முயற்சிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#VideoViral || 'அப்புறம் எனக்கு பசிக்கும்ல…' உணவுக்காக தென்னையை சாய்க்கும் காட்டு யானை!https://t.co/gkgoZMIuaK | #Pollachi | #coimbatore | #elephant pic.twitter.com/h7AxAR2N2m
— Indian Express Tamil (@IeTamil) May 9, 2023
தனியார் தோட்டத்து உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒற்றைக் காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil