அனல் பறக்கும் 'மோனிகா' பாடல்: பூஜா ஹெக்டேவின் கண்ணீரும் கடின உழைப்பும்: கடினமான பாடல் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "கூலி" திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட "மோனிகா" பாடல், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு ஒரு சவாலான அனுபவமாக அமைந்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "கூலி" திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட "மோனிகா" பாடல், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு ஒரு சவாலான அனுபவமாக அமைந்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
Monika song Pooja Hegde

இந்தப் பாடலுக்கு நடனமாடிய தனது கடின உழைப்பையும், அனல் பறக்கும் அனுபவத்தையும் பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். Photograph: (Instagram/ hegdepooja)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "கூலி" திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட "மோனிகா" பாடல், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு ஒரு சவாலான அனுபவமாக அமைந்திருக்கிறது. வெயில், புழுதி, கொப்புளங்கள், ஒரு அறுவை சிகிச்சை... என அடுக்கடுக்கான தடைகளைத் தாண்டி, இந்தப் பாடலுக்கு நடனமாடிய தனது கடின உழைப்பையும், அனல் பறக்கும் அனுபவத்தையும் பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" திரைப்படம், ரஜினி, ஆமிர் கான், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹர் என ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் அனிருத் இசையில் வெளியான "மோனிகா" பாடல் லிரிக்கல் வீடியோ, யூடியூபில் மட்டுமே 1.6 கோடி பார்வைகளைக் கடந்து சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

பூஜா ஹெக்டேவின் மனம் திறந்த பதிவு:

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "மோனிகா" பாடல் குறித்து பூஜா ஹெக்டே பதிவிட்டதாவது:

Advertisment
Advertisements

"மோனிகா பாடலுக்காக ரசிகர்கள் அள்ளித்தரும் அன்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. ஆனால், ஒன்று சொல்லியே ஆகவேண்டும்... மோனிகா பாடல் என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் உடல் ரீதியாக சந்தித்த மிகவும் கடினமான பாடல்!

அனல் பறக்கும் வெயில்... கொளுத்தும் சூரியனின் வெப்பம் என் தோள்களில் பல மாதங்களுக்கு பழுப்பு நிற வரிகளை பதிக்கும் அளவுக்கு சுட்டெரித்தது. இதையெல்லாம் தாண்டி, இந்தப் பாடலுக்காக நடனமாடினேன்.

அங்கு நிலவிய ஈரப்பதம், மூச்சை முட்ட வைத்த புழுதி, கால்களில் ஏற்பட்ட கொப்புளங்கள்... இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நான் தசைநார் கிழிவுக்குப் பிறகு ஆடிய முதல் நடனம் இது! இவ்வளவு சவால்களுக்கு மத்தியில், நான் கிளாமராகவும், கஷ்டப்படாமலும் நடனமாட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தேன்.

மோனிகா பாடலுக்காக நான் என்னுடைய அனைத்து முயற்சிகளையும், உடல் பலத்தையும் கொடுத்திருக்கிறேன். திரையில் இந்தப் பாடலைப் பார்க்கும்போது, நிச்சயமாக ஒரு சரவெடியாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

என்னுடன் நடனமாடிய துணை நடனக் கலைஞர்கள் எனக்கு பெரும் உற்சாகம் அளித்தார்கள். குறிப்பாக மகாசிவராத்திரி அன்று நான் விரதம் இருந்த சமயத்தில், அவர்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் எனக்குப் பெரிய பலமாக அமைந்தன. நீங்கள் அனைவருமே அற்புதமானவர்கள்!" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டேவின் இந்த பதிவு, திரைக்குப் பின்னால் ஒரு பாடலுக்குப் பின்னால் இருக்கும் கடின உழைப்பையும், நட்சத்திரங்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 'மோனிகா' பாடலை ரசிகர்கள் கொண்டாடும் அதேவேளையில், பூஜா ஹெக்டேவின் இந்த அர்ப்பணிப்பையும் பாராட்டுகின்றனர்.

 

Pooja Hegde

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: