Pregnant elephant dead in Kerala Artworks flood social media : யானைகள் மிகவும் அறிவுமிக்க விலங்கினங்களில் ஒன்றாகும். எப்போதுமே யானை தான் காட்டுக்கு உண்மையான ராஜா. யானைகளின் அழிவு என்பது இயற்கை பேரழிவிற்கு ஆரம்பம் என்று தான் கூறவேண்டும். கேரளாவின் பாலக்காட்டில் கருவுற்றிருந்த யானை ஒன்றுக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாச்சி பழங்கள் உணவாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வெடிமருந்துகள் யானையின் வாயில் வெடிக்கவும், பெரும் காயமுற்ற யானை, யாரையும் காயப்படுத்தாமல், தன் வயிற்றில் இருக்கும் குட்டியை காப்பாற்றும் முனைப்பில் அருகில் இருக்கும் ஆற்றில் இறங்கி, தன் வாய்ப்புண்ணை ஆற்ற முற்பட்டது.
சில நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்த யானை அந்த ஆற்றிலேயே தன் உயிரை விட்டது. இந்நிகழ்வுக்கு பலரும் தங்களின் கடுமையான கண்டனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். நேற்று ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் முழுவதும் இந்த யானையும், யானையின் வயிற்றுக் குட்டியும் தான் கார்ட்டூன் படங்களாக வலம் வந்தன. கேட்போரின் நெஞ்சை உலுக்கும் இந்நிகழ்வு இனி எந்த வன உயிரினங்களுக்கும் ஏற்பட கூடாது என்று பலரும் தங்களின் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.
Shame shame shame to humanity . Humanity has failed again...........
Save #Elephant. My SandArt at puri beach. pic.twitter.com/7J5A1OT1fh
— Sudarsan Pattnaik (@sudarsansand) June 4, 2020
As a human iam sorry#Elephant pic.twitter.com/tm2aECzHCS
— karan acharya (@karanacharya7) June 3, 2020
As news of a pregnant #elephant killed in #kerala by being fed a pineapple stuffed with a firecracker makes the rounds, this is all I have to say. pic.twitter.com/yBJuqVgiyl
— Green Humour (@thetoonguy) June 3, 2020
Pregnant elephant dies after eating cracker-stuffed pineapple! @sifydotcom cartoon pic.twitter.com/0CAtISh7AH
— Satish Acharya (@satishacharya) June 3, 2020
View this post on Instagram
"she trusted everyone,they killed her"
A post shared by Bratati Maity (@bratati_maity) on
அந்த அன்னாச்சி பழங்கள், காட்டில் இருந்து வந்து வயல் பகுதியில் இருக்கும் உணவுப் பயிர்களை சேதம் செய்யும் காட்டுப் பன்றிகளை கொல்வதற்காக வைக்கப்பட்டது என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனாலும் காட்டு உயிரினங்களின் எல்லைகள் சுருங்கிக் கொண்டே வருவதால், தன்னுடைய உணவு மற்றும் நீர் தேவைகளுக்காக வனத்தில் இருந்து விலங்குகள் வெளியே வந்து கொண்டு தான் இருக்கின்றன. இங்கு நாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை. காட்டுப்பன்றிக்கு ஏன் வெடி வைக்க வேண்டும் என்று கேட்டால், ஒரு பக்கத்தில் ஏழை விவசாயின் வாழ்வாதாரம் அது. காடுகளை அழித்தல் நிறுத்தப்பட்டு, சமநிலை உயிரியல் பயன்பாடு ஒரு நிலத்தில் ஏற்பட்டாலே ஒழிய இது போன்ற பேரிழப்புகள் தடுக்க முடியாத ஒன்றாகவே இருந்துவிடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
View this post on Instagram
" They say an elephant never forgets " #riphumanity @hindustantimes
A post shared by Arpit dudwewal (@arpitdudewal) on
View this post on Instagram
#shameonhumanity . . . . . . . . . . . . #animalsarethebest #elephant #kerala #babyelephants
A post shared by HK (@oeuvre_hk) on
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.