உங்களால் இது போல உடற்பயிற்சி செய்ய முடியுமா? பிரித்தி ஜிந்தா சவால்; வைரல் வீடியோ

நடிகையும் தொழிலதிபருமான பிரித்தி ஜிந்தா வித்தியாசமாக ஒரு உடற்பயிற்சியை செய்து மற்றவர்களையும் அதே போல செய்ய தனது இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தி ஜிந்தாவின் இந்த உடற்பயிற்சி சவால் வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகிவருகிறது.

By: Updated: April 9, 2020, 06:45:29 PM

நடிகையும் தொழிலதிபருமான பிரித்தி ஜிந்தா வித்தியாசமாக ஒரு உடற்பயிற்சியை செய்து மற்றவர்களையும் அதே போல செய்ய தனது இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளார்.

நடிகை, தொழிலதிபர் என அடையாளங்களைக் கொண்ட பிரித்தி ஜிந்தா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து தனது ஃபிட்னஸை வெளிப்படுத்துவார்.


அந்த வரிசையில், பிரித்தி ஜிந்தா, தலையில் ஒரு காலி பாட்டிலை வைத்துக்கொண்டு அந்த பாட்டில் கீழே விழாமல் 10 முறை உட்கார்ந்து எழுந்து ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி செய்துள்ளார். உடற்பயிற்சி செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரித்தி ஜிந்தா, ஷாருக்கான், ரித்திக் ரோஷன், விராட் கோலி போன்ற பிரபலங்களையும் இது போல, பாட்டிலை தலையில் வைத்துக்கொண்டு பாட்டில் கிழே விழாமல் 10 முறை உட்கார்ந்து எழுந்து கொள்ளும் ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு முன்பு, இந்த உடற்பயிற்ஸி செய்வது எப்படி என்று இதே போல, ஷ்ரத்தா கபூர் முதல் இஷான் கட்டர் வரை பல பிரபலங்கள் கடந்த காலங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி, ஹாம்ஸ்ட்ரிங்ஸ், இடுப்பு நெகிழ்வு மற்றும் கணுக்கால்கள் உறுதியாக இருக்கவும் எலும்புகள் மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

பிரித்தி ஜிந்தா சவால் விடுத்துள்ள இந்த உடற்பயிற்சியை செய்வது மிகவும் எளிது. முதலில் நீங்கள் ஸ்டேண்டர்ட்டீஸில் சற்று கால்களை இடைவெளிவிட்டு வைத்து நில்லுங்கள். உங்கள் தலையில் ஒரு காலி பாட்டிலை வைத்துக்கொள்ளுங்கள். பிறகு மெல்ல, நாற்காலி போல மெதுவாக உட்கார்ந்து எழுந்துகொள்ளுங்கள். இப்படி உங்களால் முடிந்த அளவுக்கு செய்யலாம். ஆனால், பாட்டில் கிழே விழக்கூடாது. இதுதான் சவால். பிரித்தி ஜிந்தாவின் இந்த உடற்பயிற்சி சவால் வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகிவருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Preity zinta excercise a bottle on her head while doing squats viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X