/tamil-ie/media/media_files/uploads/2020/02/New-Project-2020-02-27T212143.122.jpg)
Preity Zinta, Preity Zinta indianexpress.com, Preity Zinta fitness, பிரீத்தி ஜிந்தா, பிரீத்தி ஜிந்தா ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ, வைரல் வீடியோ, celeb fitness, fitness goals, Preity Zinta news, Preity Zinta workout, Preity Zinta viral video, Preity Zinta diet, Preity Zinta fitness tips
நடிகையும் தொழில்முனைவோருமான ப்ரீத்தி ஜிந்தா விடுமுறைக்குப் பிறகு, தான் மீண்டும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.
விடுமுறைக்குப் பிறகு மீண்டும் உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்கு செல்வது என்பது பெரும்பாலானோருக்கு போராட்டமான ஒன்று. விடுமுறைக்கு பிந்தைய சோர்வு அல்லது சோம்பல் என்று குறை கூறலாம். ஆனால், உடற்பயிற்சியைத் தவிர்ப்பது காலப்போக்கில் விரக்தியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒருவரின் உடற்பயிற்சி ஆர்வத்தையூம் குலைத்துவிடும். உடல் ஃபிட்டாக இருப்பது மற்றும் உடற்பயிற்சியைத் தவறாமல் செய்வது என்பது எளிதானது அல்ல. ஆனால், வெகேஷனுக்குப் பிறகு, இதை எப்படிச் சரியாகச் செய்வது என்பதைக் காண்பிக்கும் வகையில், நடிகையும் தொழில்முனைவோருமான ப்ரீத்தி ஜிந்தா தான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
View this post on InstagramA post shared by Preity G Zinta (@realpz) on
பிரீத்தி ஜிந்தா இந்த வீடியோவுக்கு, “உங்கள் உடற்பயிற்சிகளுடன் தொடர்ந்து இருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் சொல்வதை பயிற்சி செய்வதும் மிக முக்கியம். லண்டனில் மிகவும் ஒரு விடுமுறைக்குப் பிறகு ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதைப் பாருங்கள். இது பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. ஆனால், ஜிம்மில் இல்லை. எந்த கவலையும் இல்லை - இங்கே நான், சிந்தனைத் தேடலில், மீண்டும் சரியாக இருக்க போராடுகிறேன் ?????? இது மீண்டும் உடற்பயிற்சி செய்ய ஒன்றும் தாமதமில்லை.”
இந்த வீடியோவில், பிரீத்தி ஜிந்தா அடிவயிறு மற்றும் சாய்வுகள் தொடர்பான உடற்பயிற்சி செய்யும் லெக் லிப்ட் இயந்திரத்தில் தொங்கும் லெக் லிஃப் உடற்பயிற்சி செய்வதைக் காணலாம்.
இந்த உடற்பயிற்சியை எப்படி செய்வது?
முதலில் உங்கள் கைகளை கைப்பிடிகளின் மீது வைக்கவும்.
கைப்பிடிகளை உங்களால் முடிந்தவரை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, உங்கள் முதுகை பின்னால் உள்ள சாய்வில் நன்றாக உறுதியாக சாய்த்துக்கொள்ளவும். அதே நேரத்தில் உங்கள் கால்களை ஒன்றாக வைத்திருங்கள்.
இப்போது அப்படியே உங்கள் கால்களை மேலே உயர்த்த வேண்டும்.
முடிந்தவரை கவனமாக செய்யுங்கள்.
முழங்கால்களை வளைய விடாதீர்கள். இந்த உடற்பயிற்சி தொப்பையைக் குறைக்க உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.