குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அற்புதமாக பேட்மிண்டன் விளையாடியது பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேட்மிண்ட விளையாடிய வீடியோவை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: President Droupadi Murmu plays badminton with Saina Nehwal at Rashtrapati Bhavan, video goes viral
குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் உள்ள பேட்மிண்டன் மைதானத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உடன் புதன்கிழமை விளையாடிய போது, பரபரப்பான ஆட்டம் நடைபெற்றது. இந்த தனித்துவமான பேட்மிண்டன் போட்டியின் வீடியோவை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
“குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள பேட்மிண்டன் மைதானத்தில் முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பேட்மிண்டன் விளையாடினார்” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வீடியோ வெளியிட்டது.
இந்த வீடியோவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளை நிற ஷூ அணிந்து ஒரு சல்வார் உடையில் விளையாடுகிறார், அதே நேரத்தில் சாய்னா நேவால் தனது தடகள உடைகளை அணிந்து விளையாடுகிறார். கையில் பேட்மிண்டன் ராக்கெட்டுகளுடன் அவர்கள் மைதானத்தில் மகிழ்ச்சியாக போட்டியை எதிர்கொள்கின்றனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தன்னை ஒரு திறமையான வீரர் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்கள் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. திரௌபதி முர்மு சாமர்த்தியமாக ஷட்டில்காக்கை அடித்தார், சாய்னா நேவால் அதை தவற விட்டார் இதனால், கூட்டத்திலிருந்து ஆரவாரம் எழுந்தது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் சாய்னா நேவாலும் பேட்மிண்டன் விளையாடிய வீடியோவைப் பாருங்கள்:
#WATCH | President Droupadi Murmu played badminton with ace shuttler Saina Nehwal at the Badminton Court in Rashtrapati Bhavan, Delhi today.
— ANI (@ANI) July 10, 2024
(Video: Rashtrapati Bhavan) pic.twitter.com/sLmFqQSMtk
இந்த வீடியோ, வீடியோ 365.4K பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த விடீயோ குறித்து கமெண்ட் செய்துள்ள ஒரு எக்ஸ் பயனர், “அவர் உண்மையில் விளையாட்டில் நன்றாக விளையாடுகிறார்” என்று கூறினார். மற்றொரு பயனர், “இது மிகவும் அழகாக இருக்கிறது” என்றார். மூன்றாவது பயனர், “அவர் நன்றாக விளையாடுகிறார்” என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேட்மிண்டன் விளையாடியது குறித்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சாய்னா நேவால் ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் வியாழக்கிழமை பார்வையாளர்களுடன் உரை மற்றும் கலந்துரையாடலில் ஈடுபடுவார். இந்த நிகழ்வானது ‘அவளுடைய கதை என்னுடைய கதை’ (ஹெர் ஸ்டோரி மை ஸ்டோரி) உரை நிகழ்ச்சித் தொடரின் ஒரு பகுதியாகும். இதில் பத்ம விருது பெற்ற பெண்களின் குறிப்பிடத்தக்க பயணங்கள் இடம்பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.