Prime Minister Narendra Modi shares Modhera’s iconic sun temple’s video on a rainy day : இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய மயில் போட்டோவும் வீடியோவும் சமூக வலைதள பக்கத்தில் பெரும் வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் இன்று காலை குஜராத் மாநிலத்தில் உள்ள மோதெராவின் சூரிய கோவிலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மோடி.
Modhera’s iconic Sun Temple looks splendid on a rainy day ????!
Have a look. pic.twitter.com/yYWKRIwlIe
— Narendra Modi (@narendramodi) August 26, 2020
55 நொடிகள் ஓடும் இந்த வீடியோ வெளியிடப்பட்ட நான்கு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 12 லட்சம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். 33 ஆயிரம் பேர் இதனை ஷேர் செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டத்தில் மொதெரா கிராமத்தில் அமைந்துள்ளது சூரிய கோவில். புஷ்பாவதி ஆற்றங்கரையில் இந்த கோவில் 1026-27 ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கற்களால் செதுக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலில் மூன்று பகுதிகள் உள்ளன. முதலில் புனித மண்டபம், அடுத்தது சபை மற்றும் மூன்றாவது குண்டா. சாலுக்கிய மன்னன் பீமதேவனின் மனைவியால் கட்டப்பட்டு சூரிய கடவுளுக்கு அர்பணிக்கப்பட்டது என்கிறது இந்த கோவிலின் அழகிய வரலாறு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil