New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/23/foreign-clint-viral-2025-07-23-19-03-18.jpg)
இந்தியாவில் இந்த முறை வித்தியாசமான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Photograph: (x/WokePandemic)
viral video: வெளிநாட்டு அதிகாரிக்காக தனியார் நிறுவன ஊழியர்கள் அலுவலகத்தில் நடனம் ஆடி வரவேற்பது என்பது பணியிட ஒழுங்கை கெடுக்கும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவில் இந்த முறை வித்தியாசமான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Photograph: (x/WokePandemic)
இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில் தினமும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களைப் பார்க்கும் பலரும் லைக் செய்தும், தங்கள் கருத்துகளைப் பதிவிட்டும் ரீட்வீட் செய்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.
ஆனால், இந்தியாவில் இந்த முறை வித்தியாசமான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த வீடியோ குறித்து கோபமாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அப்படி என்ன வீடியோ என்றால், வெளிநாட்டு அதிகாரி ஒருவர் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வருகை புரிந்த நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் நடனமாடி அவரை வரவேற்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
India should stop chaprification of corporate offices
— Woke Eminent (@WokePandemic) July 21, 2025
This is so pathetic to see Indian girls dancing in office an d welcoming a foreign client and the becahra client also forced to dance.
Such showcasing will only make other countries feel Indian offices are causal and not… pic.twitter.com/gpA9kXY4GJ
இந்த வீடியோவில் வெளிநாட்டு அதிகாரி அலுவலகத்துக்குள் வரும்போது, அங்கே இருந்த ஊழியர்கள் நடனம் ஆடினர். அவர்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தி பாடல்களுக்கு நடனமாடி வரவேற்றனர். வெளிநாட்டு அதிகாரி அவர்களின் நடனத்தை ரசித்து மகிழ்கிறார். அவர் ஊழியர்களின் நடனத்தை கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்.இந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில், இந்த வீடியோ பெரிய அளவில் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது.
வெளிநாட்டு அதிகாரிக்காக தனியார் நிறுவன ஊழியர்கள் அலுவலகத்தில் நடனம் ஆடி வரவேற்பது என்பது பணியிட ஒழுங்கை கெடுக்கும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த வீடியோ குறித்து ஒரு பயனர், “பணியாளர்கள் அலுவலகத்தில் நடனமாடி தான் வெளிநாட்டு கிளைண்ட்டை வரவேற்க வேண்டுமா என்றும், அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்களா?… நடனம் ஆடாத மற்ற பணியாளர்கள் பழிவாங்கப்படுவார்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மற்றொரு பயனர், “கார்ப்பரேட் நிறுவனங்களில் இது போன்ற செயலை நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.