New Update
/
வாகன ஓட்டிகள் மத்தியில் போக்குவரத்தை சரி செய்த மருத்துவரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையிலகாட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் பல்வேறு பகுதிகளில் உயர் மேம்பாலங்களில் பணி நடைபெற்று வருவதால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை பந்தையசாலை மற்றும் அரசு கலைக்கல்லூரி சாலைகளில் மருத்துவமனை, நீதிமன்றம், திரையரங்கம், கல்லூரி மற்றும் பள்ளிகள் இருக்கும் பட்சத்தில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று அச்சாலையில் உள்ள கே.ஜி.மருத்துவமனை முன்பு வாகன நெரிசல் வழக்கத்துக்கும் மாறாக அதிகமாக ஏற்பட்ட நிலையில் அதனை சரி செய்யும் வகையில் கே.ஜி.மருத்துவமனை (தனியார்) தலைவர் மருத்துவர் பக்தவச்சலம் வாகனங்களை சீர்செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்த பின்பு பாதசாரிகள் வழியாக பொது மக்களை அனுப்பி வைத்தார்.
கோவையில், போக்குவரத்தை சரி செய்த டாக்டர் : வைரல் வீடியோ!#Coimbatore | #Traffic pic.twitter.com/QC9KQOsd4x
— Indian Express Tamil (@IeTamil) June 27, 2024
மருத்துவரின் இச்செயல் அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றதுடன் மருத்துவர் போக்குவரத்தை சரி செய்யும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.