New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/03/priya-prakash-varrier-759.jpg)
பிரியா வாரியர்
பிரியா வாரியர்
‘ஒரு அடார் லவ்’ படத்தின் டீசர் மூலம் ஒரே இரவில், ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரியா வாரியர். இவர் தான் இந்த ஆண்டின் பாப்புலர் கூகுள் தேடல்.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், கூகுள் மற்றும் ட்விட்டரில் அதிகமாக தேடப்பட்ட நபர்கள், சம்பவங்கள் மற்றும் தலைப்புகள் என எல்லாவற்றை பட்டியல் போட்டு அளித்து வரும் கூகுள் , ட்விட்டர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நபர்களில் சன்னி லியோன் முதல் இடம் பிடித்திருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் கடந்த ஆண்டு அதிகமாக தேடப்பட்ட நபர் ஜிமிக்கி கம்மல் ஷெரில் தான்.
இருப்பினும் இந்த ஆண்டு பல பரபரப்பான விஷயங்களை கடந்து வந்த நிலையில், ட்விட்டரில் அதிகமாக தேடப்பட்ட நபர்களில் முதல் இடத்தில் மோடியும், 8வது இடத்தில் தளபதி விஜய்யும் இருந்தார். மேலும் அதிகமாக சமூக வலைத்தளத்தில் தேடப்பட்ட தலைப்புகளில் சர்கார் முதல் இடத்தை பிடித்திருந்தது. அதனால் கூகுளிலும் நிச்சயமாக மோடி அல்லது விஜய் முதல் இடத்தை பிடிக்கலாம் என்று ரசிகர்களும், மோடி தொண்டர்களும் எதிர்பார்த்திருந்தனர்.
டாப் 10 ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம் பிடித்த ஒரே தமிழன்... தளபதி விஜய்
ஆனால், ஒரே ஒரு கண்ணை அடித்து இவர்கள் எல்லாரையும் க்ளீன் போல்ட் ஆகினார் பிரியா வாரியர். இவர் கண்ணடித்ததில் பலரும் மயங்கிவர்கள் மலையாளம், தமிழ் ரசிகர்கள் மட்டுமல்ல பாலிவுட் பிரபலங்களும் தான்.
கூகுளே மயங்கிப் போனது என்றால் நம்புவீர்களா? அதற்கு சாட்சி தான் இந்த ஆண்டின் tஆப் கூகுள் தேடல். கடந்த ஆண்டின் சன்னி லியோனை பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.