காதலர் தின ஸ்பெஷலாக வெளிவந்தது  ’ஒரு அடார் லவ்’பட டீசர்!

இன்ப அதிர்ச்சியாக பிரியா பிரகாஷ் வாரியரின் மற்றொரு வெவி எக்ஃபிரஷனை வைத்து டீசரை வெளியிட்டுள்ளது.

இணையத்தளத்தில் ஹாட் சென்சேஷனாக பேசப்பட்டு வரும்  பிரியா பிரகாஷின் மலையாள திரைப்படமான  ’ஒரு அடார் லவ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மலையாள இயக்குனர்  ஓமர் லுலு தற்போது பள்ளி பருவ காதலை முன்வைத்து  ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ’மாணிக்ய மலராய பூவி’ என்ற சிங்கிள் சாங் வெளியாகி இணையத்தில் வைரலானது. பாடலின் மெட்டை விட,  அந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியர், இளைஞர்கள் இணைய வைரல் அழகியானர். குறிப்பாக அவரின் ரியாக்‌ஷன்கள் மட்டும்  ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பல வெர்ஷனில் ஸ்டேட்சாக மாறியது.  அதே சமயம், இந்த வீடியோவை கலாய்த்து ஒரு பக்க மீம்ஸ்களும் வந்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், காதலர் தின ஸ்பெஷலாக, தற்போது ’ஒரு அடார் லவ்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்களிடம் பிரியா பிரகாஷ் ஃபீவர் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், படத்தின் டீசர் வெளியானால் கண்டிப்பாக பட்டி தொட்டி எங்கும் வைரல் தான் என்பதை யோசித்த படக்குழு, இன்ப அதிர்ச்சியாக பிரியா பிரகாஷ் வாரியரின் மற்றொரு வெவி எக்ஃபிரஷனை வைத்து டீசரை வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் பிரியா பிரகாஷின் தீவிர ரசிகராக மாறிப்போன இளைஞர்கள்,  அவரரை  இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்திலும் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் மட்டும்   அவரை, ஒரே நாளில் 6 லட்சம் பேர் பின் தொடர்த்துள்ளனர்.இந்த எண்ணிக்கை தற்போது  1 கோடியே 30 லட்சமாக அதிகரித்துள்ளது.இணையத்தில் தேடப்படும் பிரபலங்களில் முதலிடத்தில் இருந்த  சன்னிலியோனை பின்னுக்கு தள்ளி  பிரியா வாரியர் முன்னிலை பெற்றுள்ளார். இணையத்தில் அடுத்த வைரல்  வரும் வரை ஒட்டு மொத்த இளைஞர்களின்  சென்சேஷன் இந்த பிரியா பிரகாஷ் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

×Close
×Close