priyanka gandhi twitter SareeTwitter: தினமும் புடவை கட்டிய அம்மாக்களைக் கண்ட கடைசித் தலைமுறை நாம்தான். அந்தளவுக்கு இப்போது புடவை என்பது பண்டிகைக்கால ஆடையாக மாறிவருகிறது. தமிழர்களின் பாரம்பரிய உடையான புடவை, நம் பெண்களுக்கு அந்நியமாகி விட்டது என்ற கருத்துக்கள் உங்கள் காதுக்களுக்கு வந்தால் நம்பிவிடாதீர்கள்.
இன்றைய தலைமுறையினரும் புடவையை விரும்பி அணிகிறார்கள் என்பதற்கு இப்போது ட்ரெண்டாகும் #SareeTwitter ஹேஷ்டேக்கே சாட்சி. கடந்த 2 நாட்களாக ட்விட்டரில் #SareeTwitter தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கின் கீழ் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் இல்லத்தரசிகள் என பலரும் தங்களது மிகச் சிற்ந்த புடவை கட்டிய புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
பெண்களுக்கு மட்டுமா இந்த சேலன்ஞ் என்றால் கட்டாயம் இல்லை. ஆண்களும் தங்களின் அம்மாக்கள், மனைவி,சகோதிரிகள், தோழிகள் அணிந்த புடவை புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். 80s கிட்ஸ் தொடங்கி 90s கிட்ஸூம் இந்த சேலஞ்சில் கலந்துக் கொண்டு அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் வம்சாவளியான பிரியங்கா காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கூடவே அதனுடன் #SareeTwitter ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாக வலம் வருகிறது.