வேலைநேரத்தை குறைத்தால் ஊழியர்களின் செயல்திறன் அதிகரிக்கும் : சாதித்து காட்டிய மைக்ரோசாப்ட்

Microsoft Japan : ஊழியர்களின் வேலைநேரத்தை குறைத்து அவர்கள் வேலை செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கி தருவதன் மூலம், மைக்ரோசாப்ட் ஜப்பான் நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By: Updated: December 5, 2019, 08:10:00 PM

ஊழியர்களின் வேலைநேரத்தை குறைத்து அவர்கள் வேலை செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கி தருவதன் மூலம், மைக்ரோசாப்ட் ஜப்பான் நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஜப்பான் அலுவலகம், ஊழியர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பணிநேரங்களில் சில மாற்றங்களை பரீட்சார்த்தமாக சோதனை செய்து பார்க்க திட்டமிட்டது.
அதன்படி, முதற்கட்ட சோதனையை, இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பரிசோதித்து பார்த்தது. ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு தினங்களை தவிர, வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல, மற்றொரு தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டது. வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் என்ற நிலை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாது, மீட்டிங்குகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டது. அந்த மீட்டிங்குகளும் ஆன்லைன் பிளாட்பார்மிலேயே நடத்தப்பட்டதால், ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து நேரில் பங்கற்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டது.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

பணி – வாழ்க்கை சமநிலையை (work-life balance) ஊக்குவிக்கும் வகையில், ஊழியர்களுக்கு பயணச் செலவும், குடும்பத்தோடு இன்பச்சுற்றுலா செல்வதற்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.

இந்த சோதனை முயற்சியின் பலனாக ஊழியர்களின் செயல்திறன் 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் ஜப்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மின்சார பயன்பாடு, பேப்பர் பயன்பாடு உள்ளிட்டவைகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரீட்சார்த்த சோதனை முயற்சி 92 சதவீத வெற்றியை அளித்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் ஜப்பான் நிறுவனம், இரண்டாம் கட்ட சோதனை முயற்சியை விரைவில் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முறை, சிறப்பு விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அதற்குப்பதிலாக, ஊழியர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் பணிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறிய கால அளவிலான மீட்டிங்குகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Productivity rose 40 after introducing four day week microsoft japan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X