PUBG Mobile : கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருக்க டிக்டாக், ஹெலோ, யுடியூப், அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் என்று நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் தங்களை ஆன்லைன் கேம்களில் இணைத்துக் கொள்கிறார்கள். பப்ஜி கேம் இன்று வரை பலரின் மனம் கவர்ந்த ஒரு விளையாட்டாக இருந்து வருகிறது. மற்றொரு பக்கம் இது போதை போன்று அடிமையாக வைக்கும் ஒரு விளையாட்டாக இருக்கிறது என்று குற்றம் சுமத்தியும் வருகிறார்கள்.
இந்த விளையாட்டில் இன் - ஆப்களை வாங்குவதற்காக ரூ. 16 லட்சத்தை வீணாக செலவு செய்திருக்கிறார் 17 வயது நபர். பஞ்சாபை சேர்ந்த கரர் என்பவர் தன் அப்பாவின் வாழ்நாள் சேமிப்பை இந்த விளையாட்டிற்காக செலவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய பப்ஜி கணக்கினை பப்ஜி மொபைல் கணக்காக அப்கிரேட் செய்ய மூன்று வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. அவருக்கு மட்டுமில்லாமல் அவருடைய நண்பர்களுக்கும் கேம் அப்டேட்டிற்காக இந்த பணத்தை அவர் செலவு செய்துள்ளார். இந்த விவகாரம் அனைத்தும் அவர்களின் வங்கி ஸ்டேட்மெண்ட்டை பார்த்ததில் இருந்து தெரிய வந்துள்ளது.
கரரின் அப்பாவிற்கு மருத்துவ தேவைகள் உள்ளது. மேலும் அவர் அரசுத்துறையின் கீழ் பணியாற்றி வருகிறார். ட்ரான்ஸ்ஃபர் காரணமாக அவர் அடிக்கடி இடம் மாற கரர் தன் அம்மாவுடன் வசித்து வருகிறார். அவருடைய அம்மாவின் செல்ஃபோனில் இருந்து கணக்கு பரிமாற்றம் செய்யும் அவர் பிறகு வரும் எஸ்.எம்.எஸ் அலர்ட் அனைத்துகளையும் டெலிட் செய்துள்ளார். இந்த விவகாரம் தெரிய வந்தவுடன், அவரை வொர்க் ஷாப்பிற்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார் அவருடைய அப்பா. ஆன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்ததற்கு நல்ல காரியம் செய்துள்ளார் அவருடைய மகன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil