Advertisment

மருந்து துறை நூற்றாண்டு விழா: குத்து டான்ஸ் போட்டு கொண்டாடிய செவிலியர்கள், அலுவலர்கள்

பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழா பேரணியில் செவிலியர்கள், அலுவலர்கள் குத்து டான்ஸ் போட்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
public health department centenary celebration, public health department centenary celebration rally, nurses officers dance video goes viral, பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழா பேரணி, குத்து டான்ஸ் போட்ட செவிலியர்கள் அலுவலர்கள் வீடியோ, வைரல் வீடியோ, viral video

தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை கடந்த 1922-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா தற்போது மாநிலம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் சென்னையில் கடந்த 10-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்ட நூற்றாண்டு விழா ஜோதி, அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கிறது.இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்த ஜோதி வந்தடைந்தது.

இதனை தொடர்ந்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மக்கள் சேவையில் நூற்றாண்டு விழா ஜோதியுடன் கூடிய பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கியது.மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் மாவட்ட பொது சுகாதார துறை இயக்குனர் அருணா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்த பேரணி சுகாதாரம் மற்றும் மருத்துவம் குறித்த பதாகைகள் ஏந்தியபடி ரேஸ்கோர்ஸ் வரை சென்றடைந்தது.

முடிவில் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் இசைக்கேற்றபடி நடனமாடி நூற்றாண்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Video Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment