New Update
/indian-express-tamil/media/media_files/gC13mSNeLSlbT476Ge5O.jpg)
புதுச்சேரியில் கவர்னர் மாளிகை தற்காலிகமாக மாற்றம்; டென்னிஸ் விளையாடிய பின்னர் அதே உடைகளுடன் புதிய ஆளுநர் மாளிகை பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ரங்கசாமி; வைரல் வீடியோ
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எப்பொழுதுமே சிம்பிள் தான். இந்தநிலையில், முதலமைச்சர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடிவிட்டு அதே உடைகளுடன் புதிய கவர்னர் மாளிகை பணி நடக்கும் இடத்தை அதிரடியாக ஆய்வு செய்தார்.
தற்போதுள்ள துணைநிலை ஆளுநர் மாளிகை புனரமைக்கப்பட இருக்கும் நிலையில் தற்காலிக துணைநிலை ஆளுநர் இல்லம் மற்றும் அலுவலகத்தை பழைய சாராய ஆலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதை ஒட்டி அதற்கான பூமி பூஜை இம்மாதம் 15 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் .கைலஷ்நாதன், முதலமைச்சர் ந.ரங்கசாமி, தலைமையில் நடந்தது
இந்த நிலையில் எப்பொழுதும் மாலை வேளையில் முதலமைச்சர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடுவது வழக்கம். இன்று திடீரென டென்னிஸ் விளையாடிவிட்டு டென்னிஸ் விளையாடிய உடைகளுடன் நேராக, புதிய கவர்னர் மாளிகை அமைய உள்ள இடத்தில் நடைபெறும் பணிகளை வந்து பார்வையிட்டார்.
அப்போது அங்கு பணி செய்தவர்கள் மற்றும் சில அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் பணிகள் எப்படி நடக்கிறது எவ்வாறு நடக்கிறது? எவ்வளவு நாளில் முடிப்பீர்கள் என முதலமைச்சர் ரங்கசாமி கேட்டறிந்தார். டென்னிஸ் ட்ரெஸ்ஸோடு திடீரென ஆய்வு நடத்திய செய்த முதலமைச்சர் ரங்கசாமியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
#Watch | புதுச்சேரியில் சுமார் 250 ஆண்டுகள் பழமையான கவர்னர் மாளிகை சேதமடைந்த நிலையில், பழைய சாராய ஆலை வளாக கட்டிடத்தை கவர்னர் மாளிகையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
— Sun News (@sunnewstamil) September 21, 2024
டென்னிஸ் விளையாடி முடித்த கையோடு, அதே உடையில் வந்து பார்வையிட்டார் முதலமைச்சர் ரங்கசாமி.#SunNews |… pic.twitter.com/wQm23IEs9T
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.