தேசிய ஒற்றுமையைப் பிரதிபலிக்கும விதமாக, குஜராத் திவஸ் மற்றும் மகாராஷடிரா திவஸ் கொண்டாட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கொண்டாட்டத்தில் பங்கேற்றார். புதுச்சேரியில் வாழும் குஜராத்தி மற்றம் மராத்தி சமூகத்தினர் தங்கள் கலாச்சார உடையில் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
வண்ணமயமாக கலை-கலாச்சார நிகழ்ச்சிகள் கொண்டாட்டத்தில் இடம் பொற்றன. மராத்தி பாரம்பரிய-கலாச்சாரப் பாடல்கள், குஜராத்தி ‘டாண்டியா’ மற்றும் ‘கார்பா’ நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. முன்னதாக, குஜராத்தி மற்றும் மராத்தி சமமூகத்தைச் சேரந்த அறிஞர்கள் மற்றும் சாதனையாளர்களை துணைநிலை ஆளுநர் கொளரவித்தார். பேசியதாவது
இன்று மகிழ்ச்சியான நாள். மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை சேர்ந்த சகோதர-சகோதரிகள் தமிழகத்தை சேர்ந்தவர்களும் இணைந்து தேசிய ஒற்றுமையை பறைசாற்றும் ஒரு நல்ல நிகழ்ச்சியில் நடத்தி வருகிறோம். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியர்கள் அனைவரும் ஒன்று என்பதை மிக அழகாக வலியுறுத்தி இருக்கிறீர்கள். இன்று மொழிவாரியாக குஜராத், மகாராஷ்டிரம் உருவாக்கப்பட்ட தினம். நமது மாநிலங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இந்தியர்கள் எனும் போது நமது கலாச்சாரம் ஒன்று என்பதை அழகாக நடத்தி காட்டினீர்கள். அதற்காக பாராட்டுகிறேன்.
நீங்கள் அனைவரும் தமிழ் மக்களோடு இணைந்து புதுச்சேரியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறீர்கள். அதுபோல தமிழ் பேசும் மக்கள் அந்த மாநிலங்களுக்குச் சென்று அவர்களது வாழ்வியலை நடத்தியது மட்டுமல்லாமல் அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிகளுக்கும் பங்களித்திருக்கிறார்கள்.
குறிப்பாக குஜராத் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கம் என்ற நிகழ்ச்சி பாரதப் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலோடு சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நடத்தினார். விழாவில் நானும் கலந்து கொண்டேன்.
சௌராஷ்டிரா மக்கள் தமிழகத்திற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து இருக்கிறார். மதுரை, கும்பகோணம், தஞ்சை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் மக்கள் அதிகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பாரதப் பிரதமர் பேசும்போது நான் போட்டியிட்ட காந்திநகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு இங்கு அதிகமாக வாழும் தமிழர்கள் காரணம் என்று தனது பெருமையை, நன்றியை தெரிவித்துள்ளார்.
நாம் மாநில வாரியாக வேறுபட்டிருந்தாலும் பண்பாட்டு ரீதியாக அனைவரும் ஒன்றாக இருந்ததற்காக நாம் அனைவரும் ஒன்று கூடி சகோதர-சகோதரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மகாராஷ்டிராவில் நான்கு சதவீதம் தமிழர்கள் இருக்கிறார்கள். முதலமைச்சர் பட்னாவிஸ் தான் தமிழ்ப் பள்ளியில் படித்ததாக பதிவு செய்திருக்கிறார். திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் மும்பைக்கு சென்று அந்த மாநில வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார்கள். அனைவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம். மொழியால், பழக்கத்தால், பண்பாட்டால், எல்லைகளால் மாறுபட்டு இருந்தாலும் இந்தியர்கள் என்ற வகையில் நாம் ஒன்றுபட்டிருக்கிறோம்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். வந்தவர்கள் எல்லோரையும் அரவணைத்து தங்களது சகோதர-சகோதரிகளாக பாவித்து வளர்த்திருக்கிறது. சில வேறுபாடுகளை வைத்து நாமெல்லாம் வேறுபட்டவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
90 வயதை கடந்த மூதாட்டி இங்கே வந்து தேச ஒற்றுமை குறித்து பாட வேண்டும் என்று கேட்டார். அந்த அளவுக்கு உணர்ச்சி பூர்வமாக இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி.
அரசியலுக்காக எந்த வேற்றுமையும் ஏற்படுத்தி விடாமல் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது தேசத்தை காப்பாற்ற வேண்டும்.
மேற்கு வங்கத்திலிருந்து தெற்கு நோக்கி வந்து விவேகானந்தர், அரவிந்தர் போன்றவர்கள் புகழ் பெற்று இருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பிய போது விவேகானந்தரை கேட்டார்கள். வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்பு இந்தியாவை விரும்புகிறேன் என்று சொன்னீர்கள். இப்போது வெளிநாடுகளில் வளர்ச்சியை பார்த்துவிட்டு வந்திருக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள் இந்தியாவை விரும்புகிறீருகளா என்று கேட்டபோது, வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்பு இந்தியாவை விரும்பினேன் ஆனால் இப்போது இந்திய கலாச்சாரத்தை வணங்குகிறேன் என்றார்.
நமக்கு மொழிவாரியாகவும் ஒரு அடையாளம் இருக்கிறது. தேசம் வாரியாகவும் ஒரு அடையாளம் இருக்கிறது. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை. இந்த அடையாளத்தை நாமெல்லாம் மேம்படுத்தி வருகிறோம். பாரத பிரதமர் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் என்று நடத்திக் காட்டினார். இந்த சங்கமம் நாமெல்லாம் இணையானவர்கள் என்று சொல்வதற்காகத்தான்.
நீங்கள் புதுச்சேரிக்கு வந்து தமிழ் பேசும் மக்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மாநிலங்கள் உருவான நாட்களை இங்கு கொண்டாடி வருகிறோம். இந்த நட்பு என்றும் தொடரும். என பேசினார்