புதுச்சேரி: அச்சமின்றி பள்ளிப் பேருந்து பின்பக்க படியில் பயணிக்கும் மாணவர்கள் - வீடியோ

புதுச்சேரியில் பள்ளி இலவச பேருந்தில் பின்பக்க ஏணியில் அச்சமின்றி மாணவர்கள் ஏறி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது

புதுச்சேரியில் பள்ளி இலவச பேருந்தில் பின்பக்க ஏணியில் அச்சமின்றி மாணவர்கள் ஏறி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry: Students climb ladder on back of free school bus - video

Puducherry school students viral video

புதுச்சேரி - பாபு ராஜேந்திரன்

புதுச்சேரியில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என்று இலவச பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இலவசமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், மறைமலை அடிகள் சாலையில் இலவச பேருந்து ஒன்றில் பின் பக்க ஏணியில் இரண்டு மாணவர்கள் ஏறி செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பதிவிட்ட சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் பாதுகாப்பின்றி பயணம் மேற்கொள்வதை கண்டிக்கும் வகையிலும் இதனை கவனிக்காமல் பேருந்து இயக்கிய ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். மாணவர்கள் எந்தவித பயமும் இன்றி பாதுகாப்பும் இன்றி பின்பக்க ஏணியில் பயணம் மேற்கொள்வது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Video Viral Social Media Viral Puducherry Viral Video Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: