புதுச்சேரி – பாபு ராஜேந்திரன்
புதுச்சேரியில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என்று இலவச பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இலவசமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மறைமலை அடிகள் சாலையில் இலவச பேருந்து ஒன்றில் பின் பக்க ஏணியில் இரண்டு மாணவர்கள் ஏறி செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பதிவிட்ட சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் பாதுகாப்பின்றி பயணம் மேற்கொள்வதை கண்டிக்கும் வகையிலும் இதனை கவனிக்காமல் பேருந்து இயக்கிய ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். மாணவர்கள் எந்தவித பயமும் இன்றி பாதுகாப்பும் இன்றி பின்பக்க ஏணியில் பயணம் மேற்கொள்வது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
#VIDEO || புதுச்சேரி: பள்ளி இலவச பேருந்தில் பின்பக்க ஏணியில் ஏறி செல்லும் மாணவர்கள்!https://t.co/gkgoZMIuaK | #puducherry pic.twitter.com/gLzcLRx4bJ
— Indian Express Tamil (@IeTamil) February 24, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil