பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் கீதா (49). ஆடி கிருத்திகையை முன்னிட்டு, வீட்டின் அருகே உள்ள கோயிலுக்கு கீதா நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்த இரண்டு நபர்களில் ஒருவர், கூலாக நடந்து சென்று கீதாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிததார். இதன் பின்னர் அவர்கள் மின்னல் வேகத்தில் பைக்கில் ஏறி தப்பி ஓடினார்கள்.
இது குறித்து கீதா அளித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ 2.5 லட்சம் மதிப்பிலான 5 சவரன் தாலி செயினை பறித்துச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கீதா கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை இரண்டு மர்ம நபர்கள் பறித்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“