கோதாவரி வெள்ளத்தில் சிக்கிய அதிசய மீன்! ரூ.22,000-க்கு ஏலம்! தாலியை விற்றாவது வாங்கணும்னு சொல்ற அளவுக்கு என்ன ஸ்பெஷல்?

ஆந்திராவில் யானம் பகுதியில் நடந்த மீன் ஏலத்தில் 800 கிராம் எடையுள்ள புலசா மீன் ஒன்று, யானத்தில் நடந்த ஏலத்தில் ரூ.22,000 என்ற மிகப்பெரிய விலைக்கு விற்பனையாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் யானம் பகுதியில் நடந்த மீன் ஏலத்தில் 800 கிராம் எடையுள்ள புலசா மீன் ஒன்று, யானத்தில் நடந்த ஏலத்தில் ரூ.22,000 என்ற மிகப்பெரிய விலைக்கு விற்பனையாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
pulasa fish bid x

ஆந்திராவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மல்லாடி பிரசாத் என்பவரால் இந்த மீன் பைரவபாலம் அருகே பிடிக்கப்பட்டுள்ளது. Photograph: (Image Source: x/ @KP_Aashish)

ஆந்திராவில் யானம் பகுதியில் கோதாவரி வெள்ளநீரில் ஒரு அதிசய மீன் மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. 800 கிராம் எடையுள்ள ஒரே ஒரு மீன் மட்டும் ரூ.22,000-க்கு ஏலம் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வளவு விலை உயர்ந்தது அது என்ன மீன், அந்த மீனில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பதைப் பார்ப்போம். 

Advertisment

இந்த  ஆண்டு மழைக் காலத்தில், ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் இருக்குற யானம், தல்லாரேவு, மற்றும் கோனசீமா மாவட்டத்தில் சில இடங்களில் வெள்ள நீரில் சிக்கிய ஒரு அபூர்வ மீன், அதுவும் 800 கிராம் எடை உள்ள ஒரு மீன், ரூ.22,000-க்கு ஏலம் போயிருக்கிறது. அந்த மீனின் பெயர் புலசா மீன். இந்த புலசா மீன் வங்கதேசம், மியான்மர், மேற்கு வங்கம் என பல இடங்களில் 'ஹில்சா' மீன் என்று கூறுகிறார்கள். ஆனால், கோதாவரி ஆறு வழியா வங்காள விரிகுடாவில் இருந்து வரும்போது, அதனுடைய பெயர் மாறுகிறது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மழைக்காலத்தில், கடலில் இருந்து கோதாவரியின் அடர் சிவப்பு, சேறு கலந்த தண்ணீரை நோக்கி நீரோட்டத்துக்கு எதிரா புலசா மீன் நீந்தி வரும்போது, இந்த மீனோட நிறம் மாறிவிடுகிறது. அப்படி வரும்போது, ஆந்திராவில் உள்ளூர் மீனவர்களும், கோதாவரி பகுதி மக்களும் இந்த ‘புலசா’ மீனைப் பிடிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மட்டுமே புலசா மீன் கிடைக்கிறது. 

இந்த புலசா மீன் இனப்பெருக்கத்துக்காக கோதாவரி ஆற்றை அடையும்போது, இந்த மீனின் உடம்பில் கொழுப்புச் சத்து நிரம்பி இருக்கும். அதனால், இதை சாப்பிடுகிறவர்களுக்கு அதிகமான புரதச் சத்து கிடைக்கிறது. இதோட சுவைக்கு ஈடு இணை இல்லை என்று சொல்கிறார்கள். 

ஆந்திராவில், கோட்டிபள்ளி, ரவுலபாலம், பசர்லபுடி, போடாசகுரு, யானம், பைரவபாலம், டவுலேஸ்வரம் போன்ற பகுதிகள் இந்த புலசா மீனோட இனப்பெருக்க மையங்களாக இருக்கிறது. ஆனால், இனப்பெருக்கத்துக்கு முன்னாடியே இது பிடிக்கப்படுகிறது ஒரு வருத்தமான விஷயம்.

Advertisment
Advertisements

இந்த மீனை சமைக்கிறதும் ஒரு தனி கலைதான். பெண்கள் ரொம்ப கவனமா இதை சூப் செய்து, இரவு முழுக்க பானையில ஊற வச்சு, மறுநாள் காலையில சாப்பிடுகிறார்கள். அப்போதுதான் அதனுடைய சுவை நன்றாக இருக்குமாம். முக்கிய அதிகாரிகள், அரசியல் தலைவர்கள்னு யாரையாவது திருப்திப்படுத்த இந்த மீன் சூப்ப போட்டு உபசரிப்பார்களாம்.

புலசா மீன் சும்மா ஒரு மீன் மட்டுமில்லை, இது ஒரு பாரம்பரியம், ஒரு உணர்வு. அதனாலதான் தெலங்கானா, ஆந்திரா மக்கள் மத்தியில “தாலியை விற்றாவது ஒரு புலசா மீனை வாங்க வேண்டும்” அப்படிங்கிற பழமொழி இருக்கிறது. இந்த மீன் மீது அவ்வளவு ஒரு மோகம்.

ஆனா, ஆண்டுக்கு ஆண்டு இந்த புலசா மீன் கிடைப்பது என்பது குறைந்துகொண்டே வருகிறது. 2023, 2024-ல் எல்லாம் இரண்டு மூன்று தடவைதான் புலசா மீன் கிடைத்ததாம். பல்வேறு காரணங்களால இந்த அரிய வகை மீன் அழிந்துகொண்டு வருகிறது என்று சொல்கிறார்கள்.

ஆந்திராவில் யானம் பகுதியில் நடந்த மீன் ஏலத்தில் 800 கிராம் எடையுள்ள புலசா மீன் ஒன்று, யானத்தில் நடந்த ஏலத்தில் ரூ.22,000 என்ற மிகப்பெரிய விலைக்கு விற்பனையாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பைரவபாலம் பகுதியில் பிடிபட்ட 800 கிராம் எடையுள்ள ஒரு புலசா மீன், ஏலத்தில் ரூ.22,000 என்ற வியக்க வைக்கும் விலைக்கு விற்பனையானது. பொன்னமண்டா ரத்னம் என்ற பெண் இந்த மீனை ஏலத்தில் எடுத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மல்லாடி பிரசாத் என்பவரால் இந்த மீன் பைரவபாலம் அருகே பிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த சீசனில் இதுவரை நான்கு முறை புலசா மீன்கள் பிடிக்கப்பட்டு, ரூ.15,000 முதல் ரூ.22,000 வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அண்மையில், மேலும் மூன்று மீன்கள் பிடிக்கப்பட்டு, அவை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலான விலைகளில் விற்பனையானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒவ்வொரு பருவமழையின் போதும், இந்த புலசா மீன்கள் வங்காள விரிகுடாவில் இருந்து, கோதாவரி ஆற்றுக்குள் இனப்பெருக்கத்திற்காக நீந்தி வருகின்றன. இதனால் அழகிய கோதாவரி மாவட்டங்களில் உள்ள உணவகம் மற்றும் சமையல் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு பெரிய சுவையான உணவு கொண்டாட்டம்தான்.

Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: