புனேவில் எர்னஸ்ட் அண்ட் யங் (இ.ஒய்) என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர் அன்னா செபாஸ்டியன் (26) உயிரிழந்தது கார்ப்பரே ஊழியர்களிடையே பெரும் அதிர்வலைகளை எழுப்பியது.
அன்னா செபாஸ்டியன் மரணத்துக்கு பணிச்சுமைதான் காரணம் என அன்னாவின் தாயார் அனிதா இ.ஒய் இந்தியா தலைவர் ராஜீவ் மேமானிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி கார்ப்பரேட் ஊழியர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
அன்னாவின் தாயார் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி பலரும் அந்நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்த நிலையில், இதனை வழக்காக எடுத்து விசாரிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
சி.ஏ. தேச்சி பெற்ற அன்னா செபாஸ்டியன், இந்த நிறுவனத்தில் சேர்ந்து 4 மாதங்கள் ஆகியுள்ளது. வார இறுதி நாட்களிலும் வேலை, ஓவர் டைம் பணி, ஷிஃப்ட் நேரம் முடிந்தபோதும் வீட்டிற்கு வந்து பணியைத் தொடர்வது உள்ளிட்ட பணிச்சுமைக்கு ஆளாகி மனம், உடல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக அவருடைய தாயார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அன்னாவின் இறுதிச் சடங்கிற்கு உடன் வேலை பார்த்த சக ஊழியர்கள் ஒருவர்கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“