திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, பெருமாளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக கழுத்தில் 25 கிலோ தங்கச் சங்கிலி அணிந்து வந்து சாமி தரிசனம் செய்த புனே பக்தர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 4 தேதி முதல் 12-ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். திருப்பதி வெங்கடேச பெருமாள் உலகத்திலேயே பணக்காரக் கடவுளாக இருக்கிறார். பெருமாள் சிலை தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதுமட்டுமல்லாமல், திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர் நாள்தோறும் பணம், தங்க நகை என்று விலை உயர்ந்த பொருட்களை காணிக்கை செலுத்துகிறார்கள்.
அப்படியான திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக, புனேவில் இருந்து திருப்பதி பெருமாளை தரிசிக்க வந்த ஒரு குடும்பத்தினர் கழுத்தில் 25 கிலோ தங்கச் சங்கிலியை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தபோது எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
புனேவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வியாழக்கிழமை 25 கிலோ தங்கச் சங்கிலியை அணிந்துகொண்டு திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலுக்கு வந்த வீடியோவை பி.டி.ஐ செய்தி நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை நிறைய தங்க நகைகளை அணிந்துகொண்டு திருப்பதிக்கு வந்திருக்கிறார்கள். அதில், இரண்டு ஆண்களும் கழுத்தில் கிலோ கணக்கில் தங்கச் சங்கிலியுடன் காணப்படுகின்றனர். அந்த பெண் நிறைய ஆபரணங்களை அணிந்திருந்ததைப் பார்க்க முடிகிறது.
திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக திருப்பதிக்கு வந்த இந்த பணக்காரம் குடும்ப உறுப்பினர்கள் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு தங்கமா என்று வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“