New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/11/lol.jpg)
Pune housemaid’s smart business card goes viral
சப்பாத்தி செய்றதுக்கு ரூ. 1000, துணி துவைக்க ரூ. 800 என கட்டணத்தையும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
Pune housemaid’s smart business card goes viral
Pune housemaid’s smart business card goes viral : புனேவில் இருக்கும் பவ்தன் என்ற ஏரியாவில் வீட்டு வேலை செய்து கொண்டிருப்பவர் கீதா காலே. அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வீட்டில் அவருக்கு வேலை இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் சோகமடைந்த கீதா மற்றொரு வீட்டில் வேலை செய்ய சென்றுள்ளார். அவர் சோகமாக இருப்பதை கண்டறிந்த அந்த வீட்டின் உரிமையாளர் தானாஸ்ரீ ஷிண்டே கீதாவிற்கு உதவ முன்வந்தார்.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
ஒரே நாள் இரவில் கீதாவிற்காக பிஸினஸ் கார்ட் ஒன்றை உருவாக்கி அதனை 100 ப்ரிண்டுகளும் அடித்து கொடுத்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்த பிஸினஸ் கார்ட் சென்று சேர புனேவின் ஹாட்டாப்பிக்காக மாறினார் கீதா.
அந்த கீதாவின் பிஸினஸ் கார்டில் பவ்தனில் வீட்டு வேலை செய்ய கீதா இருப்பதாக அறிவித்து , அதன் கீழே அவருடைய அலைபேசி எண் மற்றும் எந்தெந்த வேலைக்கு எவ்வளவு தொகையை கட்டணமாக பெறுகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஆதார் கார்ட் வெரிஃபை செய்யப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட அவருக்கு வேலையும் கிடைத்தது. கீதாவும் தற்போது ஹேப்பி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.