உண்மையான சிங்கப்பெண் : மொபைல்போன் திருடர்களிடம் போராடி மீட்ட சிறுமி – வைரலாகும் வீடியோ

Brave girl : வீடியோ வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள், குசும் குமாரியின் வீர தீர சாகத்தை புகழ்ந்து வருகின்றனர்.

By: Updated: September 2, 2020, 04:45:53 PM

மொபைல் போனை பறித்து தப்பியோட முயன்ற திருடர்களிடம் கத்திக்கீறல் வாங்கியும் இறுதிவரை போராடி போனை மீட்ட 15 வயது சிறுமியின் வீடியோ, சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் – கபுர்தலா சாலையில், ,தீன் தயாள் உபத்யாய் நகரின் அருகே, 15 வயது சிறுமி (குசும் குமாரி) போன் பேசிக்கொண்டபடி நடந்து சென்றுகொண்டிருந்தாள். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி திருடர்கள், அந்த சிறுமியிடம் இருந்து போனை பறித்தனர். அதற்குள் சுதாரித்த குமாரி, மொபைல் போனை பறித்தவனை கீழே இழுத்துவிட்டாள். அவன் விழுந்த நிலையில், கத்தியால், குமாரியின் கையில் கீறிவிட்டான். ரத்தம் கொட்டியது. இதனை சாதகமாக பயன்படுத்தி அவன் தப்பிக்க முயன்றான். ரத்தம் வருவதையும் பொருட்படுத்தாக குசும் குமாரி விரைந்து செயல்பட்டு, அவனிடம் போராடி, போனை மீட்டதோடு மட்டுமல்லாது, அவனையும் பிடித்தாள். அதற்குள் அங்கு இருந்தவர்கள் வரவே. இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவன் அங்கிருந்து தப்பிவிட்டான். போனை பறித்தவன் மாட்டிக்கொண்டான்.

இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளதோடு மட்டுமல்லாது டிரெண்டிங்கும் ஆகியுள்ளது.

எனக்கு சொந்தமான பொருள் என்பதால் அதை பறிகொடுத்துவிடக்கூடாது என்பதற்காக கத்திக்கீறல் வாங்கினாலும் பரவாயில்லை என்று திருடர்களிடம் போராடியதாக குசும் குமாரி, The Tribune பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

காயங்களுடன் குசும் குமாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிடிபட்ட திருடன், போலீசில் ஒப்படைக்கப்பட்டான். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள், குசும் குமாரியின் வீர தீர சாகத்தை புகழ்ந்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Watch: 15-year-old girl fights phone snatchers armed with sharp weapon in Punjab

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Punjab girl fights phone snatcher phone snatcher viral video mobile snatcher bike viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X